முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதானவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறதா? கண்ணாடி பார்க்கும்போதெல்லாம் உங்களுக்கு கவலையாக இருக்கிறதா? ஐயோ இப்படி ஆகவிட்டதே என அனுதினமும் கவலையடைகிறீர்களா? அதற்கெல்லாம் ஒரு நல்ல தீர்வு மற்றும் நிவாரணிதான் இந்த முட்டை கோஸ். வீட்டிற்கு சமைக்க வாங்கும் இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு என்றாலும், இது முகத்தின் சுருகத்தைப் போக்கி இளைமையான, வளமான , பொலிவாக தோற்றத்தைமுகத்திற்கு கொடுக்கிறது என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.
இதை சிறிதளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு அரைத்து, அதனுடன் சிறிதளவு நீர் விட்டு முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிந்த நீரில் முகம் கழுவி வர மிகம் பிரகாசமடையும். முகத்தில் இருக்கும் தோல் சுருக்கம் நீங்கி இளைமையான தோற்றத்தினை அளிக்கும்.
முட்டை கோஸ் சாறை முகத்தில் தடவி வர, முகச் சுருக்கம் மறையும். சருமம் மென்மையாகும்.
Muga surukkam maraiya muttaikosu saru
0 Comments