FB YT IG

செல்வம் மற்றும் உடல்நலம் தரும் கணபதி ஹோமம் !

Post Image
கணபதி ஹோமம் ஆண்டுக்கு ஒருமுறை தொடர்ந்து செய்வதால் நமக்கு கிடைக்கும் பலன்கள்.


நோய்கள், தொழில் தடங்கள்: குடும்பத்தில் உள்ளவர்களின் நோய்கள், தொழில் தடங்கள், மனக் குழப்பம், எதிர்மறை எண்ணங்கள் விலகி நன்மை உண்டாகும்.

கேது திசை: ஜாதகத்தில் கேது திசையில் இருப்பவகள் அக்கிரகத்தினால் உண்டாகும் பாதிப்பு குறைந்து நன்மைகள் உண்டாகும். திருமண தடை: திருமண தடை, வேலையின்மை, தொழில் நஷ்டம் நீங்கி வெற்றியும், சொல்வ சொழிப்பும் வந்து சேரும்.

அக்னி ஐந்து பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியை கொண்டு கணபதி ஹோமம் செய்யும் பொழுது அக்னியில் இருந்து வெளியாகும் அதிர்வுகள் உடலில் உள்ள சோர்வை நீக்கி புத்துணர்வு அடைய செய்யும்.

ganapathi homam seivathal erpadum palanga
கல்வி குழந்தைகள் கல்வியில் சிறந்த முன்னேற்றம் அடைவார்கள், படிப்பது மனதில் நிற்க்கும். இறை வழி பாதை இறை வழியில் செல்பவர்களுக்கு ஏற்படும் தடைகளையும், பிரச்சனைகளையும் நீக்கி அவர்களின் பாதையை எளிமையாக்கும்.


துர்மரணங்கள், விபத்துக்கள் ஏதிர்பாராத விதமாக ஏற்படும் துர்மரணங்கள், விபத்துக்கள் இவைகளில் இருந்து பாதுகாக்கபடும். தனசேர்க்கை நச்சரிக்கும் பணக் கஷ்டங்களில் இருந்து விடுபட்டு தனசேர்க்கையும், முன்னேற்றம் ஏற்படும்.

மேன்மை தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களும் மேன்மையுண்டாகும். குடும்ப பிரச்சனைகள் ஆண்டுக்கு ஒருமுறை கணபதி ஹோமம் செய்வதால் குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற குடும்ப பிரச்சனைகள் வராமல் தடுப்பு சுவராக கணபதி ஹோமம் இருக்கும்.

நேர்மறை சக்திகள்(positive energy) கணபதி ஹோமம் செய்வதால் வீட்டில் உள்ள தீய சக்திகள் என்று அழைக்கப்படும் எதிர்மறை சக்திகள் (நெகட்டிவ் எனர்ஜி) வெளியேறி மாறாக நேர்மறை சக்திகள்(positive energy) அதிகமாகும். ஹோமத்திற்க்கு பயன்படுத்தும் பொருட்களின் பலன்கள்:


1000 தேங்காய்க் கீற்றினால் ஹோமம் செய்தால்: செல்வம் வளரும், உண்டாகும். ஸத்துமா, நெல் பொரி, திரிமதுரம்: ஸர்வ வச்யம் நல்கும். திரிமதுரம் கலந்த நெல்பொரி கல்யாண ப்ராப்தியைத் தரும். நெல் கலந்த அன்னம்: நெய் ஆகியவை விருப்பத்தை ஈடேற்றும். தேன்: தங்கம் தரும்.

நெய்யில் நனைத்த அப்பம்: மந்திர சித்தி, ராஜ வச்யம் தரும். மோதகம்: போரில் வெற்றி, நினைத்ததை தரும். மட்டை உரிக்காத தேங்காய்: (1 மண்டலம்) மந்திர சித்தி நல்கும். தாமரை: செல்வ வளர்ச்சி தரும். வெண்தாமரை:வாக்கு சித்தி ஏற்படும். அருகம்புல்: குபேர சம்பத்து தரும். வில்வ இலை, தேங்காய், அவல், மிளகு: ஸர்வ வசியம் தரும்.

வாசகர்கள் கருத்துகள்

Comments