FB YT IG

சகதியில் மாட்டியவரை மீடக உதவிகரம் நீட்டிய மனித குரங்கு ! வைரல் வீடியோ !!!

Post Image
சில நேரங்களில் விலங்குகளைவிட, மனிதர்களே பரவாயில்லை என்று தோன்றும். அந்தளவிற்கு அதனுடைய ஈவு இரக்க குணம் மனதை தொடும். அந்த வகையில் இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் நடந்த சம்பவத்தில் பாதுகாப்பு ஊழியர் ஒருவர் தவறி சகதியில் விழுந்தபோது, அதிலிருந்து மீண்டும் வர கை கொடுத்து தூக்கி விட்டுள்ளது ஒரு மனித குரங்கு.  அது குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அழிந்து வரும் மனித குரங்குகளை பாதுகாப்பதற்காக தனியார் அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது.அந்த அமைப்பை சேர்ந்த ஊழியர் ஒருவர் குரங்குகள் அதிகம் வாழும் வனப்பகுதியில் உலவும் பாம்புகளை பிடித்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.


manitha kurangau

அப்போது அவர் எதிர்பாராதவிதமாக ஆற்றில் இடுப்பளவு சகதியில் சிக்கிக்கொண்டார். அப்போது அந்த வழியாக வந்த மனித குரங்கு ஒன்று சகதியில் சிக்கி நின்ற ஊழியருக்கு உதவுவதற்காக கைநீட்டியது.

இந்த உருக்கமான காட்சியை அப்பகுதியில் நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படி சில நேரங்களில் தங்களை பாதுகாத்து, பராமரித்து வரும் பாதுகாவலர்களுக்கு ஏதாவது துயரம் நடந்தால் அதற்கு உடனடியாக உதவி செய்து, மீட்பு பணியில் ஈடுபடும் மிருகங்கள், இன்றைய உலகில் கொடிய, கொடூரமான குணம் கொண்ட மனிதர்களுக்கு மத்தியில் விலங்குகள் எவ்வளவோ மேல் என்று எண்ணத் தோன்றுகிறது.


வாசகர்கள் கருத்துகள்

Comments