FB YT IG

முதல் குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்கும் எவ்வளவு நாட்கள் இடைவெளி வேண்டும் என்று தெரியுமா?

Post Image

பல தம்பதியர்களுக்கு உள்ள சந்தேகமே முதல் குழந்தைக்கு பிறகு எத்தனை ஆண்டுகள் இடைவெளி விட வேண்டும் என்பது தான். அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் கொடுக்க பெரியவர்கள் இருப்பதில்லை. பொதுவாக மருத்துவர்கள் கூறுவது இரண்டு அல்லது மூன்றாண்டுகள் இடைவெளி வேண்டும் என்பது. பெரியவர்களும் அவ்வாறே கூறுவார்கள். ஆனால் மிகச்சிலர் ஐந்தாண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும் என்று ஒரு பொதுவான கருத்தினை வெளியிடுவார்கள்.

உண்மையில் இரு குழந்தைகளுக்கு இடையே எத்தனை ஆண்டுகள் இடைவெளி விட வேண்டும்? அப்படி இடைவெளிக்குப் பிறகு எனென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்துகொள்வோம்.

அரசாங்கமே முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் போதிய இடைவெளி வேண்டும் என்கிறது. மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் இடைவெளி இருந்தால் நல்லது என்கிறார்கள். என்ன காரணத்திற்காக இதனை வலியுறுத்துகிறார்கள் என்பதை இந்த பதிவில் காணலாம்.



மிகச்சிறிய இடைவெளி தாய்க்கும் குழந்தைக்கும் போதுமானது அல்ல. கிராமங்களில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பார்கள். எனவே சரியாக மூன்று ஆண்டுகள் இடைவெளி போதுமானது. அதேபோல அதிகபட்ச இடைவெளி விட்டாலும் நல்லதல்ல. ஏனெனில் புதிய குழந்தையின் நுழைவு முதல் குழந்தைக்கு போட்டி மனப்பாங்கை உருவாக்கிவிடலாம்.

மேலும் இரண்டாவது குழந்தை உங்களது பணி ஓய்வு வருவதற்குள் தனது வாழ்க்கையை செட்டில் செய்துகொள்ளும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இடைவெளி அதிகமாக விட்டு, அந்த பையனோ பெண்ணோ செட்டில் ஆவதற்குள் தந்தைக்கு பணியில்லாமல் போனால் அந்த குழந்தைக்கு உதவ முடியாத சூழல் வரலாம்.



நடுத்தர வயது குடும்பமாக இருந்தால் இந்த இடைவெளி அவர்களது பொருளாதார வாழ்வை கட்டமைக்க சரியாக இருக்கும். அதுமட்டுமின்றி தாய்மார்கள், முதல் குழந்தை பெற்று வளர்த்துவதற்கான அனுபவத்தை பெறுவதற்கே இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகிவிடும். முழு அனுபவத்தை பெற்று கொள்வதற்கு முன்னரே இரண்டாம் குழந்தை என்றால் தாய் சிரமப்பட நேரிடலாம். இதையெல்லாம் வைத்து தான் போதிய இடைவெளியை வலியுறுத்துகிறார்கள்.

இதில் குறிப்பிட்ட படி முதல் குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்கும் இடைவெளி விட்டால், நிச்சயம் தாய், சேய் நலன்கள் மற்றும் உடல் ஆரோக்கியம் பேணபடும்.

#குழந்தை #மருத்துவம் #உடல்நலம்


வாசகர்கள் கருத்துகள்

Comments