FB YT IG

ஆவாரம் பூ கருப்பட்டி டீ செய்வது எப்படி?

Post Image
Aavaram flower blackberry tea
ஆவாரம் பூ கருப்பட்டி டீ 



தினமும் ஒரு மூலிகை பானம் அருந்தினால் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். அந்த வகையில் இன்று மருத்துவ உணவான ஆவாரம் பூ டீ தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.


மாறிவரும் வாழ்க்கைச் சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை பரவலாக எல்லோருக்கும் சர்க்கரை நோயின் தாக்கம் இருக்கிறது. பெண்களுக்கான உடல் சார்ந்த பிரச்னைகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

 தினமும் ஒரு மூலிகை பானம் அருந்தினால் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். அந்த வகையில் இன்று மருத்துவ உணவான ஆவாரம் பூ டீ தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்:
ஆவாரம்பூ பொடி - ஒன்றரை டீஸ்பூன் (காயவைத்து அரைத்துக்கொள்ளவும்)
இஞ்சி - சிறிய துண்டு ஒன்று
கருப்பட்டி - சிறிய துண்டு
மிளகு  அரை - டீஸ்பூன்
தண்ணீர்  - ஒரு கப்

ஏலக்காய் - 2


செய்முறை :

ஆவாரம் பூ பொடி, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் இஞ்சி, ஆவராம் பொடி கலவையைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

நிறம் மாறியதும் இறக்கி வடிகட்டி குடிக்கவும்.

வாசகர்கள் கருத்துகள்

Comments