பாத்திரங்களில் பிசு பிசுப்பை போக்க ஐடியா !


சமையலறையில் சமைக்கும் போது எண்ணெய் பசை மற்றும் கறைகள் ஆங்காங்கு இருப்பது சாதாரணம் தான். ஆனால் அத்தகைய எண்ணெய் பசை மற்றும் சில கறைகளைப் போக்க பலர் மிகவும் சிரமப்படுவார்கள். அதிலும் சமைக்கும் பாத்திரங்களில் இருக்கும் கறைகள் மற்றும் எண்ணெய் பசையை நீக்குவது என்பது மிகவும் கஷ்டமான ஒன்று.

அப்போது கஷ்டப்படாமல் எளிதில் அத்தகைய கறைகள் மற்றும் எண்ணெய் பசைகளைப் போக்குவதற்கு ஒருசில எளிய வழிகள் உள்ளன. அவற்றை தெரிந்து கொண்டால், எதற்கு கவலைப்பட வேண்டாம்.

அந்த வகையில் அத்தகைய பிரச்சனைகளை போக்குவதற்கு எளிதான வழிகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, கவலையின்றி கறைகளையும் எண்ணெய் பசைகளையும் நீக்கி, வீட்டையும் சமைக்கும் பாத்திரங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

க்ரீஸ் பேப்பர்

ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மையில் க்ரீஸ் பேப்பரை, கறை மற்றும் எண்ணெய் பசையுள்ள பாத்திரங்களில் தேய்த்து, பின் டிஷ் வாஷ்ஷர் பயன்படுத்தி தேய்த்து கழுவினால், அதில் உள்ள கறைகள் மற்றும் எண்ணெய் பசையானது எளிதில் நீங்கிவிடும்.

பேக்கிங் சோடா

வீட்டை சுத்தப்படுத்தும் பொருட்களில் பேக்கிங் சோடா மிகவும் பிரபலமானது. அதிலும் எண்ணெய் பசையுள்ள பொருட்களில் உள்ள எண்ணெய் பசைகளைப் போக்குவதற்கு, பேக்கிங் சோடாவை தெளித்து, பின் ஸ்பாஞ்ச் கொண்டு தேய்த்தால், அதில் உள்ள பசை சீக்கிரம் போய்விடும்.

வினிகர்

வினிகர் ஒருவித நாற்றத்தை ஏற்படுத்தும் தான். இருப்பினும், இவற்றை எண்ணெய் பசையாக இருக்கும் பாத்திரத்தில் ஊற்றி தேய்த்தால், ஒரே நிமிடத்தில் பாத்திரத்தில் உள்ள கறைகள் மற்றும் எண்ணெய் பசைகள் நீங்கும். மேலும் இதில் உள்ள நாற்றத்தைப் போக்க, பாத்திரத்தை கழுவியதும், சுத்தமான துணி கொண்டு துடைத்து காற்றோட்டமாக வைத்தால், நாற்றமானது போய்விடும்.
சமையல் பாத்திரம்
சமையல் பாத்திரம்

எலுமிச்சை

எலுமிச்சையின் பலனுக்கு அளவே இல்லை. இது ஒரு நேச்சுரல் ப்ளீச். இத்தகைய சிட்ரஸ் பழத்திற்கு கறைகள் மற்றும் எண்ணெய் பசையைப் போக்கும் சக்தி உள்ளது. அதிலும் எண்ணெய் பசையுள்ள பாத்திரத்தில் பேக்கிங் சோடாவை தெளித்து, பின் எலுமிச்சை துண்டுகளை பயன்படுத்தி தேய்த்து கழுவினால், அதில் உள்ள கறைகள் மற்றும் எண்ணெய் பசை நீங்கி, பாத்திரம் நன்கு ஜொலிக்கும். இவையே சமைக்கும் பாத்திரங்களில் உள்ள எண்ணெய் பசை மற்றும் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள். வேறு ஏதாவது உங்களுக்கு தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments