வெட்டுக்காயம் - முதலுதவி குறிப்புகள்

ஆழமான வெட்டு காயம் ஏற்பட்டு, அதகளவு இரத்தம் வெளியேறினால் உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி இது. முதலில் நல்ல தூய்மையான துணியை வைத்து காயம் ஏற்பட்ட இடத்தில் அழுத்திப் பிடிக்க வேண்டும். அந்த துணியை மீறி இரத்தம் வெளிப்பட்டதால் அதன் மீது மற்றொரு துணியை வைத்து நன்றாக அழுத்திப் பிடித்துக்கொள்ள வேண்டும்.

vettu kayam muthal uthavi
வெட்டு காயம் முதலுதவி

இரத்தம் நிற்கும்வரை பிடித்திருந்துவிட்டு, நின்றவுடன் அதன் மீது Band aid போட்டு ஒட்டிவிட வேண்டும். இதெல்லாம் ஒரு சில நிமிடங்களில் செய்து முடிக்க வேண்டும். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று, வெட்டுப் பட்ட காயத்திற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிறிய சிறிய சிராய்ப்பு போன்ற காயங்கள் என்றால், இரத்தம் தானாகவே கசிவது நின்றுவிடும். அந்த காயத்தின் மீது antibiotic மருந்தில் பஞ்சை நனைத்து சுத்தம் செய்து காயத்திற்கு மருந்தி தடவி கட்டுப் போடலாம். ஆழமான வெட்டு காயம் என்றால் கட்டாயம் மேற் கூறிய முதலுதவியை செய்துவிட்டு, சரியான சிகிச்சை உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments