கண்கள் பராமரிப்பு இயற்கையான வழிகளில்!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சொல்வாங்க ஆனால் அகத்தின் மட்டுமல்ல முகத்தின் அழகு கூட கண்களில் தெரியும். நம் எண்ணங்களை, சிரிப்பு, துக்கம், அழுகை என நவ ரசங்களையும் பிரதிபலிப்பதில் கண் முக்கிய பங்குவகிக்கிறது. கண் நம் உடலில் பராமரிக்க வேண்டிய உறுப்புகளில் முதன்மையான ஒன்று. கண்களில் ஏதாவது பிரச்சனை என்றால் நம் உலகமே இருட்டாகிவிடும் போல் இருக்கும். இந்த கண்களை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது நம் நல்வாழ்வுக்கு மிக முக்கியம்.

இந்த கண்கள் புத்துணர்வோடு இருந்தால் தான் நாமும் நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க முடியும். உங்கள் கண்களை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்.

* கண்களை பாதிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது சரியான தூக்கமின்மை. எனவே தினமும் குறைந்தது எட்டு மணி நேரம் தூங்குவது மிக முக்கியம்.

* கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் கண்களுக்கு நல்லது.

* பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள், ஆரஞ்சி நிறப் பழங்கள் மற்றும் காய்கள் கண்களின் அழகை பராமரிக்கும் முக்கிய பொருட்கள்.

* போதிய அளவு தண்ணீர் அருந்த வேண்டும் இது கண்களுக்கு புத்துணர்வை அளிக்கும்.

* மீன்கள் கண்களுக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது. இதனால் கண் பார்வை குறைபாடுகள் சரியாகும். எனவே தினமும் உணவில் மீன் சேர்ப்பது நல்லது.

* கண்களில் தூசு விழுந்தால் கண்களை கசக்கவோ கூடாது, தூய்மையான குளிர்ந்த நீரால் கண்களை கழுவ வேண்டும்.

* கண்களில் எண்ணெய் விடுவது முதலிய செயல்களை செய்ய கூடாது.

Post a Comment

0 Comments