மஞ்சள் காமாலை, பித்தபை நோய்களுக்கு இயற்கை வைத்தியம்

"கையான் தகரை", இதைக் கரிசலாண்கண்ணி என்றும் கூறுவர். நீர் நிரம்பிய இடங்களில் செழித்து வளரும். சொரசொரப்பான இலையும் வெள்ளைப் பூக்களும் கொண்டது இது கல்லீரல், பித்தப்பை நோய்களைக் குணப்படுத்தும் அற்புத மூலிகை.

மஞ்சள்காமாலை வந்தவர்கள் கீழாநெல்லிச் சாற்றுடன் இதன் சாற்றையும் அருந்திவர நல்ல பசி எடுக்கும். துரித நிவாரணம் கிட்டும். இதனால் பல் துலக்கினால் ஈறுகள் பலப்படும். வாய்ப்புண், வாய் துர்நாற்றம் அகலும்.

உமிழ்நீர் சுரப்பிகள் சரிவர வேலை செய்யாத போது தொண்டையில் கசப்பும், குமட்டலும் இருக்கும். இந்த இலையை அடிநாக்கில் சுவை மொட்டுகள் மீது அழுத்தித் தேய்த்து வர சுரப்பிகள் நன்கு வேலை செய்து கசப்பு மாறும். தொண்டையில் உள்ள கோழையும் வெளியேறும்.

இதன் சாற்றை தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கூந்தல் செழித்து வளரும். சாற்றை நேரடியாகத் தலையில் தேய்த்துக் குளிக்க மூளைக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும். நல்ல உறக்கம் வரும்.

Post a Comment

0 Comments