நரம்பு சிலந்தி குணமாக நாட்டு வைத்தியம்

கெண்டைக்காலில் முதலில் கொப்புளம் ஏற்படும். பின்னர் புண்ணாகி நீர் வடியும். எவ்வளவு வைத்தியம் செய்தாலும் மீண்டும், மீண்டும் தலைகாட்டும். காலே நிறம் மாறிக் கருத்துவிடும்.

வில்லங்கமான சரும வியாதி இது. குழந்தைகளுக்கு வந்தால் 'கால்கடுவன்' என்று பெயர். பெரியவர்களுக்கு வந்தால் நரம்புச் சிலந்தி என்று பெயர். இது நீர்பட்ட இடமெல்லாம் பரவும். இதற்கு அற்புத மருத்துவம் காண்போமா?

சுடுசோற்றில் புளித்தத் தயிர்விட்டுப் பிசைந்து மிதமான சூட்டில் புண்மீது அப்பவும். அதன் மீது பூவரசன் இலையை ஒட்டி நன்கு கட்டவும். மறுநாள் வெந்நீர் ஊற்றிப் புண்ணை நன்கு கழுவவும்.

மேலே உள்ள அழுக்குகள் நீங்கிப்புண் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதன் மீது நன்கு கனிந்த பப்பாளிப்பழத்தைப் பிசைந்து அப்பவும். அதன் மீது வெற்றிலையை ஒட்டிக்கட்டவும். உள்ளே உள்ள துர்நீர் வடிந்து வீக்கம் குறையும். மூன்று நாட்களில் நல்ல குணம் தெரியும். மீண்டும் வராது.

Post a Comment

0 Comments