எங்க அக்காவ முதல்ல ஜெயில்ல போடுங்க சார்..! ஜூடோ கேமில் சேர்த்துக் கொள்ளாத தால் 8 வயது சிறுவன் போலீசில் புகார் !!!

கேரளாவில் ஒரு  8 வயது மதிக்கத்தக்க சிறுவன் தன் அக்கா உட்பட 5 நபர்கள் மீது லூடோ விளையாட சேர்த்துக் கொள்ளாததால், அவர்களை கைது செய்யுமாறு போலீசில் புகார் அளித்த சம்பவம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் கோழிக்கோடு என்ற பகுதியில் வசிக்கும் சிறுவன் உமர் நிதர். 8 வயது. தற்பொழுது   3 ஆம் வகுப்பு படிக்கும் இவன், ஊரடங்கு காரணத்தால், வெளியில் சென்று தன் நண்பர்களுடன் விளையாட முடியாத நிலை இருந்துள்ளது. வீட்டிலிருந்த அவன், வேறு பொழுதுபோக்கு இல்லாத தாதால் அக்காவுடன் விளையாடி கொண்டிருந்தான். ஆனால்  அவரின் அக்கா மற்றும் அக்காவின் தோழிகள் சேர்ந்து தற்பொழுது பிரபலமாகி இருக்கும் LUDO GAME விளையாட ஆரம்பித்தனர்.  என்னையும் உங்களோடு விளையாட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று அந்த சிறுவன் கூறியுள்ளான்.

ஆனால் அங்கு தான் பிரச்னை ஏறப்பட்டது. அதில் இவர் மட்டும் ஆண் என்பதால் அந்த சிறுமிகள் கிண்டல் அடித்தும், விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாமலும் இருந்துள்ளனர். இதனால் அவனுக்கு வெறுப்பு ஏற்படுத்தியது.

ludo game


கோபமடைந்த உமர் தன் தந்தையிடம் இதனை பற்றி கூறியுள்ளார். உமரின் தந்தையும் விளையாட்டாக 'நீ அவங்க மேல போலீசில் புகார் கொடு' என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அவன் செய்த செயல்தான் இன்று தீவிரமான வைரல் செய்தியாகி உள்ளது.

யாரும் எதிர்பாராத விதமாக உமரின் பக்கத்து வீட்டிற்கு போலீஸ் வழக்கு விசாரணை ஒன்றினுக்காக கஸ்பா காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் வந்துள்ளனர். அவர்களை பார்த்த உமர் 'எனக்கு ஒரு கம்பளைண்ட் கொடுக்கணும். நான் ஒரு பையன் என்பதால் என் அக்கா மற்றும் அவளின் தோழிகள் லூடோ, பேட் மிண்டன் மற்றும் போலீஸ் திருடன் விளையாட்டில் என்னை சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்' என கூறியுள்ளார்.

அதன் பிறகும் அவன் விடவில்லை. இப்போது இரவு நேரம் ஆகிவிட்டதால் நாளை நாங்கள் நேரில் வந்து பார்க்கிறோம் என சொல்லி போலீசார் அங்கிருந்து புறப்பட்டுள்ளது. இதனையடுத்து அவன் இரவோடு இரவாக உமர் ஒரு புகார் கடிதத்தை ரெடி பணியுள்ளார்.


மறுநாள் காலை அப்பாவி சிறுவனின் வழக்கை விசாரிக்க யு.பி உமேஷ் மற்றும் கே.டி நிராஸ் காவலர்கள் உமரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். உமர் தான் எழுதிய கடிதத்தில், 'நான் அவர்களிடம் (சிறுமிகளிடம்) தங்கள் விளையாட்டுகளில் என்னை அழைத்துச் செல்லும்படி பல முறை சொன்னேன், ஆனால் அவர்கள் மறுத்துவிட்டார்கள். உடனடியாக அவர்களை கைது செய்யவேண்டும்' என எழுதி இருந்தது. இதனையடுத்து போலிசார் அவன் அக்காவின் தோழிகளை அழைத்து

 உமரை விளையாட்டில் சேர்த்துக் கொள்ளுமாறும், அவனும் உங்களை போல் தான் என அறிவுறுத்தி உள்ளனர். விளையாட்டாக இந்த சிறுவன் செய்த செயல் கேரள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் தற்போது இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Post a Comment

0 Comments