FB YT IG

சாப்பாட்டுக்கு கூட வழியில்லை அண்ணே... புள்ளங்க வயிறாற சாப்பிடு 3 நாள் ஆச்சு.. கண்ணீர் விட்டு கதறி அழுத காமெடி நடிகர் ! கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

Post Image
லாக் டவுன் செய்தாலும் செய்தார்கள், சினிமா முதல் தொழிற்சாலை தொழிலாளிகள் வரை அனைவருமே அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பான அன்றாட கூலி வேலை செய்வோரின் பிழைப்பில் மண் விழுந்தது. அரசு முடிந்தளவுக்கு உதவிப் பொருட்களை வழங்கிய போதிலும் அது போதுமானதாக இல்லை. குறிப்பாக குடும்பத்தில் நான்குக்கும் மேற்பட்ட நபர்கள் உள்ள நிலையில் அரசு தரும் உதவிப் பொருட்கள் நான்கு நாட்களுக்கு கூட போதுமானதாக இல்லை.

வேலையிருந்தாலாவது சென்று பணம் சம்பாதித்து வந்து தேவையான பொருட்களை வாங்கி குடும்பத்தை ஓட்டலாம். ஆனால் வேலையும் இல்லை. கடைகளும் இல்லை. ப்ளாக் மார்க்கெட்டில் பொருட்களின் விலையோ மலையளவு உயர்ந்துவிட்டது. இந்நிலையில் வீட்டில் அடைப்பட்டு கிடந்து பட்டியாக இருப்பதை விட சாவது மேல் என முடிவு செய்து ஒரு சில ஏழைக்குடும்பங்கள் தங்களை தாங்களே மாய்த்துக்கொண்ட துயர சம்பவங்களும் அங்கங்கே நடந்து கொண்டுதான் உள்ளது.

theepetti ganesan


இந்நிலையில் கொரோனா குறித்த தகவல்கள் ஒருபுறம் உயிர் பயம் ஊட்டுவதாக உள்ளது. அதே நேரத்தில் உயிர் போனாலும் பரவாயில்லை. பிழைப்புக்கு சென்றாக வேண்டும். கிடைக்கும் பணத்தை வாங்கி குடும்பத்துக்குதேவையானதை வாங்க வேண்டும் என்ற நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதே நிலைமை சினிமாத்துறை நடிகர்ளையும் விட்டு வைக்கவில்லை. துணை நடிகர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் நிலமை மோசமானதாக உள்ளது. "ரேணி குண்டா" படத்தில் காமெடி நடிகர் தீப்பெட்டி கணேசன் சமீபத்ததில் ஒரு கண்ணீர் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற போதுமான பணம் தன்னிடம் இல்லை என்றும், தன்னுடைய குழந்தைகளின் படிப்பு மற்றும் சாப்பிட்டிற்கே வழியில்லாமல் தவிப்பதாக அதில் தெரிவித்திருந்தார்.

இந்த தகவலை நடிகர் "தல" அஜீத் இடம் கொண்டு சேர்த்தால், அவர் தனக்கு உதவுவார் என்று அந்த கண்ணீர் வீடியோவில் கதறி கூறியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் "வைரல்" ஆக பரவ, அந்த தகவல் அஜீத் வரை சென்று சேர்ந்தது. இதற்கு முன்னதாக அவரின் நிலைமை கண்டு வருந்தி, சினிமா பாடலாசிரியர் சினேகன் "தீப்பெட்டி" கணேசனை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

ஒரு மாத த்துக்கு தேவையான உணவுப்பொருட்களை வாங்கி கொடுத்ததோடு இல்லாமல், இரண்டு வருடத்திற்கு அவரின் பிள்ளைகளின் கல்விச் செலவையும் ஏற்றுள்ளார். இன்னும் அஜீத்தின் கவனம் பெறாமல் இருக்கும் தீப்பெட்டி கணேசனுக்கு , பலரிடமிருந்தும் ஆறுதல் மற்றும் உதவிப் பொருட்கள் கொடுக்க பலரும் முன் வர தொடங்கியுள்ளனர். ஒரு பிரபலமான சினிமா நடிகரின் நிலையே இப்படி இருக்கும்போது, அன்றாடங்காய்ச்சிகளான ஏழைகளின் வாழ்வில் இந்த "கொரானோ" தாக்கம் மிகப் பெரியதாக இருக்கும் என பலரும் வேதனையுறுகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு மெல்ல மெல்ல படிப்படிய்யாக தளர்வுகளை அளித்து, இயல்பு நிலைமை தமிழகத்தைக் கொண்டு வர முயற்சி செய்கின்றனர். எனினும் கொரோனா தமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடுவதால், கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் மட்டுமே அமல்படுதப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கொள்ளை நோய் தமிழகம் உட்பட இந்தியா முழுமைக்கும் அதி விரைவாக பரவி வருவதாக வரும் தகவல்கள் பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.


வாசகர்கள் கருத்துகள்

Comments