FB YT IG

ஊரங்கு நேரத்தின் போதும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று சேவை செய்யும் மூதாட்டி ! உங்களுக்கு மனம் இருந்தால் ஒரு ஷேர் செய்யுங்கள் !

Post Image
நினைத்துக் கூட பார்க்க முடியாத சேவை இது.  ஒரு நாளைக்கு ஒருவர் பசி ஆற வேண்டுமானால் , ஓட்டலில் சாப்பிட வேண்டுமானால் கட்டாயம் 50 ரூபாயாவது வேண்டும். குறைந்த பட்சம் மூன்று பரோட்டா சாப்பிட வேண்டுமானால் கூட 30 ரூபாய் கட்டாயம் தந்தே ஆக வேண்டும். இல்லையென்றால் ஓட்டலில் சாப்பிட முடியாது. வீட்டில் பசி ஆற வேண்டுமானால் கூட ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 100 ரூபாய்க்கான அரிசி, பருப்பு, இன்னபிற மளிகை சாமான்கள் கண்டிக்கா செலவாகும்.

அப்படிப்பட்ட இந்த கால கட்டத்தில் ஒரு மூதாட்டி, அந்த காலத்தில் கொடுத்ததை போல "ஒரு இட்லி ஒரு ரூபாய்" க்கு கொடுத்து பிறர் பசி ஆற்றி வருகிறார். அவரது கதை தான் இன்று நாம் பார்க்கவிருக்கும் பதிவு.

oru rubai idli patti



கோவை அருகே உள்ள ஆலாந்துறை வடிவேலம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள் (வயது 85). இவர் 1 ரூபாய்க்கு இட்லி வழங்கி வருவதால் இவரை இட்லி பாட்டி என்றே பலரும் அழைத்து வந்தனர்.


தற்போது கொரோனா பரவல் காரணமாக நாடே ஸ்தம்பித்து இருக்கும் சூழலில் பம்பரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார் இட்லி பாட்டி. ஊரடங்கு உள்ள நிலையிலும் வெளியூரில் இருந்து வந்தவர்கள் மற்றும் உள்ளூரில் இருப்பவர்கள் என தினமும் 400 பேருக்கு மேல் உணவளித்து வருகின்றார். தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வால், பொட்டுக்கடலை, உளுந்து முன்பு கிலோ ரூ.150 வரை விற்கப்படுகிறது. இருந்தாலும் புன்னகை மாறாமல், எப்படியாவது சமாளித்து ஒரு ரூபாய்க்கு இட்லியை கொடுத்து வருகிறார் மூதாட்டி கமலாத்தாள். தன்னை தேடி பல பேர் வந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை கொடுத்து வருவதாக தெரிவித்தார்.

oru rubai idli patti



இதுகுறித்து கமலாத்தாள் கூறியதாவது:-

மற்றவர்கள் செய்யும் உதவியை நான் மறக்க மாட்டேன். அரிசி, பருப்பு உள்ளிட்டவை விலை உயர்ந்த போதிலும் சமாளித்துக் கொண்டு 1 ரூபாய்க்கு இட்லி வழங்கி வருகிறேன். தினமும் 400 பேர் என்னிடம் இட்லி வாங்கிச் செல்கிறார்கள். எனது மகனும், பேரனும் உதவியாக உள்ளனர்.

முன்பு விறகு அடுப்பில் சமையல் செய்தேன். இதனால் புகையால் பாதிக்கப்பட்டேன். தற்போது பலரது உதவியால் கியாஸ் அடுப்பு மூலம் இட்லி அவித்து வழங்கி வருகிறேன்.

oru rubai idli

கொரோனா பாதிப்பினால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் என்னால் இயன்ற உதவியை 1 ரூபாய்க்கு இட்லி வழங்கி வருகிறேன். என்னை சந்தித்து பலரும் பாராட்டி செல்வதும், உதவி பொருட்களை வழங்கி வருவதும் தள்ளாத வயதில் மேலும் உத்வேகத்தை அளித்து வருகிறது.

தள்ளாத வயதில் கூட ஓய்வெடுக்காமல் தனது பணியை செய்து வரும் இந்த பாட்டிக்காக இந்த பதிவை ஒரு ஷேர் செய்யுங்கள். அனைவருக்கும் இவரது சேவை சென்று சேரட்டும்.



வாசகர்கள் கருத்துகள்

Comments