விரைவில் கருத்தரிக்க லேகியம்
இன்று பல பெண்களுக்கு இந்த பிரச்னை உள்ளது. இயற்கையிலேயே கருவருவது குறைந்து வருகிறது. வாழ்வியல் இதற்கு காரணமாக இருக்கலாம். மேலும் சில பெண்களின் உடல் வாகு, உடல் வெப்பம், மரபு சார்ந்த பிரச்னைகளால் கரு உருவாகமல், திருமணம் ஆகி நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை பேறு இல்லாமல் தவித்து வருவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த இலேகியம் ஒரு வரபிரசாதம் என்றே சொல்லலாம்.
எப்படி கருவுருவாதற்கான லேகியம் செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.
கரு உண்டாக லேகியம் செய்ய தேவையானவை
- நெய்யில் வறுத்து இடித்த ஜாதிக்காய் தூள் 250 gm,
- சுக்கு தூள் 250 gm,
- நீர்முள்ளி தூள் 250 gm,
- எள்ளு தூள் 750 gm.
- சீனா கற்கண்டு 4 kg
- தேன் 1 லிட்டர்
- நெய் 1 லிட்டர்
மூலிகை சுத்தி மற்றும் சூரணம் செய்தல்
ஜாதிக்காய்யை நெய்யில் வறுத்து பொடியாக்கவும், சுக்கு எடுத்து அதன் மீது சுண்ணாம்பு தடவி சுட்டு சுத்தி செய்த பொடித்துக் கொள்ளவும். நீர்முள்ளி விதையை எடுத்து கல், மண் நீக்கி வெய்யிலில் காய வைத்து எடுத்து பொடியாக்கவும். மேற்ச் சொன்ன அளவு எள்ளு எடுத்து கல், மண் தூசி நீக்கி வெய்யிலில் நன்றாக இடித்து பொடித்து வைக்கவும்.சுண்ணாம்பு தெளிவு நீர் செய்முறை
தேவையான அளவு கல் சுண்ணாம்பு வாங்கி 10 படி நீர் ஊற்றி வேகவைத்து தெளியவிடவும் நன்றாக தெளிந்த பின் சுண்ணாம்பு அடியில் தங்கி தெளிந்த நீர் கிடைக்கும் இதுவே சுண்ணாம்பு தெளிவு நீர்.கரு உண்டாக லேகியம் செய்முறை
8 படி சுண்ணாம்பு தெளி நீரில் எடுத்து அதில் சீனா கற்கண்டை தூள் செய்து சிறுக சிறுக சேர்த்து பாகு செய்யவும் நன்றாக பாகு பதம் வந்ததை அறிந்து அதில் முன் தூள் செய்து வைத்துள்ள மூலிகை பொடிகளை ஒன்றாக கலந்து சிறுக சிறுக சேர்த்து கிண்டி லேகிய பதத்தம் கண்டு அதில் 1 லிட்டர் தேன் ஊற்றி கிண்டி இறக்கி ஆற விட்டு மறுநாள் நெய் உருக்கி சூட்டோடு லேகியத்தில் சேர்க்கவும். சூடு ஆறிய பின் புட்டியில் அடைக்கவும். லேகியம் அல்வா போன்று இருக்கும்.கரு உண்டாக லேகியம் சாப்பிட வேண்டிய அளவு
பெண் காலை, இரவு ,ஒரு பெரிய நெல்லிக்கனி அளவு நன்கு மென்று சாப்பிடு 200 ml பசும்பால் குடிக்கவும்.ஆண் காலை மட்டும் ஒரு பெரிய நெல்லிக்கனி அளவு நன்கு மென்று சாப்பிடு 200 ml பசும்பால் குடிக்கவும்.
பின்னர் கணவன் மனைவி முறை படி சேரந்து வாழ 5, 6 மாதத்தில் கரு உண்டாகும்.
இந்த லேகியத்தை மட்டும் சாப்பிட்டால், மிக விரைவில் கரு உண்டாகி, குழந்தை பிறந்து உங்களது மன சங்கடத்தை தீர்த்து, வாழ்க்கையில் மகிழ்ச்சியை வரவழைக்கும். முயன்று பாருங்கள். பிள்ளை இல்லை, குழந்தை இல்லை, மலடி, ராசி இல்லாதவள் என்ற பெயர் நீங்கி, உங்கள் வீட்டு பெண்களும் பூத்து குலுங்கும் பூங்காவனமாக மாறுவார்கள்.
வாசகர்கள் கருத்துகள்