உடல் சூட்டை தணிக்கும் கேரட் - லெமன் சர்பத் செய்வது எப்படி ?

Carrot-Lemon-Juice
உடல் சூட்டை   தணிக்கும் கேரட் - லெமன் சர்பத்

வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சியை தரும் இந்த ஜூஸ். உடல் சூட்டை தணிக்கும். இந்த ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :

கேரட் - 50 கிராம்

எலுமிச்சைச் சாறு - ஒரு ஸ்பூன்
தேன் - 2 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு

உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:

இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்

கேரட்டை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கேரட், இஞ்சியுடன் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.

இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன், உப்பு கலந்து பருகவும்.

Post a Comment

0 Comments