FB YT IG

6 அழகிய அழகுக் குறிப்புகள்...

Post Image

 6 beautiful beauty tips…

BEAUTY TIPS


6 அழகிய அழகுக் குறிப்புகள்...

1. எலுமிச்சம் பழம் தோலை குளிக்கும் தண்ணீரில் போட்டு வைத்து சிறிது நேரம் கழித்து குளித்தால் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்.

2. அக்குள் மற்றும் தொடையின் இடுக்குகளில் அதிக வியர்வையினால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு கடும் கருமை படர்ந்திருக்கும், அந்த இடங்களில் தேங்காய் எண்ணெயை தடவி சில நிமிடங்கள் கழித்து எலுமிச்சை தோல் கொண்டு தேய்த்து குளித்து வந்தால் படிப்படியாக கருமை குறையும்.

3. எலுமிச்சை தோலில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்பண்புகள் முகப்பரு வராமல் தடுக்கிறது எலுமிச்சை தோல் புதினா இரண்டையும் அரைத்து முகத்தில் பூசி வந்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பொலிவாகும்.

4. முகம் கைகளில் இருக்கும் இறந்த செல்களை நீக்க எலுமிச்சை பொடியை உபயோகிக்கலாம் மூன்று டீஸ்பூன் எலுமிச்சை தோள்பொடி மூன்று டீஸ்பூன் ஓட்ஸ் பொடி இரண்டு டீஸ்பூன் தேன் 2 டீஸ்பூன் ரோஜா பன்னீர் இவை அனைத்தையும் பசை போல கலக்கவும் இதை முகம் கழுத்து மற்றும் உடலில் பூசி மசால் செய்து பத்தினியும் கழித்து குளிக்கவும் இதனால் சருமத்தில் படர்ந்து இருக்கும் இறந்த செல்கள் நீங்க வாரம் ஒரு முறை இவ்வாறு செய்யலாம்.

5. வீட்டில் மெனிக்யூர் பெடிக்யூர் செய்யும் போது எலுமிச்சை பொடியை சூடான தண்ணீரில் கலந்து கை மற்றும் கால்களில் பூசவும் 15 நிமிடம் கழித்து சுத்தம் செய்தால் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளிச்சிடும்.

6. எலுமிச்சை தோல்பொடி மருதாணி பொடி ஆகியவற்றை கலந்து ஹேர் டை தயாரித்தல் முடிக்கு இயற்கையான நிறம் கிடைக்கும்.



வாசகர்கள் கருத்துகள்

Comments