What to do if menstruation lasts for long days?
மாதவிலக்கு நீண்ட நாட்கள் நீடித்தால் என்ன செய்ய வேண்டும்?
பெண்களுக்கு மாதவிடாய் மூன்று முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். ஏழு நாட்களுக்கு மேல் ரத்தப்போக்கு தொடர்ந்தால் அது கவனிக்கப்பட வேண்டியதாகும்.
இயல்பை விட நீண்ட காலம் நீடிக்கும் மாதவிடாய் ஹைப்பர் மெனோரியா மற்றும் மெனோராஜியா என்று அழைக்கப்படுகிறது.
7 நாட்களுக்கு மேல் அதிக அளவில் வெளியேறும் ரத்தப்போக்கு கனமான உணர்வு, குமட்டல் , வாந்தி, கடுமையான வலி, எடை இழப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
ஹார்மோன் கோளாறு, கருப்பையில் ஏற்படும் பிரச்சனை, மாதவிடாய் நிற்கும் வயது, சிலவகை மாத்திரைகளை உட்கொள்வது போன்றவை நீண்ட நாட்களாக நீடிக்கும் மாதவிடாய்க்கு காரணமாகும்.
சில நேரங்களில் இது கருப்பை புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம.
இரும்புச்சத்து குறைபாடும் நீண்ட கால மாதவிடாய் போக்கிற்கு வழிவகுக்கும் .
தினசரி உணவின் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சேர்ப்பது மாதவிடாய் சுழற்சி சீராக்கும்.
மாதவிடாய் போக்கு நீண்ட நாள் இருக்கும் பெண்களுக்கு விட்டமின் ஏ குறைபாடு இருக்கும் சீஸ், முட்டை, மீன், பால், தயிர் இறைச்சி, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காய்கறி பழங்களை இவர்கள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மாதவிடாய் ஆரம்பித்து ரத்தப்போக்கு ஏற்படும் நாட்களில் இரும்பு மற்றும் மக்னீசியம் சத்துக்கள் நிறைந்த உணவுகள் முழு தானியங்கள் மீன், முட்டை தயிர், டார்க் சாக்லேட் போன்றவற்றை சாப்பிடலாம்.
இஞ்சி தேநீர் மாதவிடாய் நேரத்தில் வலியை குறைக்க உதவும் .
போதுமான அளவிற் தண்ணீர் குடிப்பது முக்கியம்.
மாதவிடாய் முடிந்த பின்பு புரதம், கால்சியம், இரும்புச்சத்து விட்டமின் பி நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
கீரை வகைகள், பால் மற்றும் பால் பொருட்களை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.
வாசகர்கள் கருத்துகள்