Spinal problems affecting women…
பெண்களை பாதிக்கும் முதுகு தண்டுவட பிரச்சனைகள்...
முதுகு தண்டுவட பிரச்சினைகள் பெண்களையே அதிகம் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதற்குக் காரணம் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது, அல்லது வேலை பார்ப்பது ,உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, சரியான தோரணையில் உட்காராதது ,அதிக கனமான பொருட்களை தூக்குவது , இடைவெளி இன்றி நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவது ஆகியவை ஆகும்.
மேலும் சரியான நேரத்துக்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போவது என சத்துக் குறைபாட்டாலும் முதுகு வலி உண்டாகும்.
குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் குழந்தை பேற்றின் போது ஏற்படும் ஹார்மோன் கோளாறு மற்றும் உடல் மாற்றங்களாலும் முதுகுத்தண்டில் வலி வரலாம்.
ஷிங்கிள் எனப்படும் வைரஸ் தொற்றினால் உண்டாகும் தோல் நோய், புற்றுநோய் கட்டிகள் முதுகுத்தண்டின் கீழ் பகுதியில் சேதம் ஏற்படுவது ,சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை நோய் தொற்று, இடுப்பு அழற்சி நோய், காய்ச்சல், முதுகு எலும்பு தொற்று முதுகு வலிக்கு காரணமாகும்.
கண்டறிய உதவும் சோதனைகள்
எக்ஸ்ரே , சிடி ஸ்கேன் , எம்ஆர்ஐ, ரத்த பரிசோதனை நரம்பியல் சோதனைகள் மூலம் முதுகுத்தண்டு பிரச்சனையின் தீவிரத்தை கண்டறிய முடியும்.
இதில் 90 சதவீதம் முதுகு தண்டுவட பிரச்சனைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியும்.
உடற்பயிற்சிகள், உடலின் சமநிலை பராமரித்தல் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த மூலம் முதுகு வலி வருவதை தடுக்கலாம்.
ஏரோபிக் பயிற்சிகள், யோகா, நீச்சல், நடைபயிற்சி போன்றவற்றை தினசரி செய்வது முதுகுப்பகுதியில் உள்ள தசைகள் சிறப்பாக செயல்பட உதவும்.
தினசரி காலை உணவை தவறாமல் சாப்பிட வேண்டும் இது அன்றைய நாளின் தொடக்கத்தில் உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கும் ,நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தொற்றுகள் ஏற்படாமல் காக்கும்.
உடல் பருமன் மற்றும் அதிக எடையும் முதுகு வலிக்கான முக்கிய காரணமாக, எனவே உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.
வாசகர்கள் கருத்துகள்