FB YT IG

தூக்கத்தை கெடுக்கும் குறட்டையை விரட்ட நான்கு எளிய வழிகள்...

Post Image

 Four simple ways to get rid of sleep-destroying snoring…

Snoring home remedies


தூக்கத்தை கெடுக்கும் குறட்டையை விரட்ட நான்கு எளிய வழிகள்...

தூங்கும்போது மூச்சுக்காற்று தொண்டை பகுதியில் உள்ள மெல்லிய  திசுக்களின் வழியாக செல்வதால் ஏற்படும் அதிர்வு ஒளியே குறட்டை என்கிறோம்.

இது இயல்பானது தான் என்றாலும் பலரது மிகப்பெரிய பிரச்சினையாக மாறிவிடுகிறது. 

அதிகப்படியான உடல் எடையை குறைத்தல் , மது பழக்கத்தை தவிர்த்தல் ,பக்கவாட்டு நிலையில் படுத்து உறங்குதல்,  சற்று உயரமான தலையணையை பயன்படுத்துதல் போன்ற ஒரு சில வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமாக குறட்டை விடுவதை நிறுத்த முடியும்.

 இது தவிர குறட்டை பிரச்சனையை தீர்ப்பதற்கு இயற்கையான வழிகள் சிலவற்றை காண்போம்.

நீராவி பிடித்தல்

குறட்டைக்கான காரணங்களில் ஒன்று மூக்கில் ஏற்படும் அடைப்பு. இதனால் தூக்கத்தில் மூச்சு திணறல் ஏற்படும் , இதற்கு ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதிலிருந்து வரும் நீராவியை பத்து நிமிடங்களுக்கு மூக்கு வழியாக உள்ளிழுக்க வேண்டும் படுக்கைக்கு செல்லும் முன்பு இவ்வாறு செய்யலாம் இதனால் மூக்கில் உள்ள அடைப்பு நீங்கி குறட்டை விடுவது நிற்கும்.

புதினா மற்றும் வெந்தயம்

செரிமான பிரச்சினைகளாலும் குறட்டை ஏற்படலாம். இதற்கு புதினா மற்றும் வெந்தயம் சிறந்த தீர்வாகும். 

வெந்தயம் தூக்கத்தில் ஏற்படும் மூச்சு திணறலுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. சிறிதளவு வெந்தயத்தை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து அதை தூங்கச் செல்வதற்கு முன்பு சாப்பிடலாம்.

 அதேபோல் ஒரு டம்ளர் தண்ணீரில் , ஒரு டீஸ்பூன் வெந்தய பொடி மற்றும் சிறிதளவு புதினா இலைகளை போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

 இந்த நீரை வடிகட்டி அதில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம் இதனால் செரிமான பிரச்சனை நீங்குவதுடன் இரவில் நிம்மதியான உறக்கமும் கிடைக்கும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன்

அரை டேபிள்ஸ்பூன் தேன் மற்றும் அரை டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் நன்றாக கலந்து படுக்கைக்கு செல்லும் முன்பு சாப்பிடலாம்.  இது தவிர ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து தூங்க செல்வதற்கு முன்னர் குடிக்கலாம் இது தொண்டைக்கு இதமாக இருப்பதுடன் குறட்டையையும் தடுக்கும்.

பூண்டு

பூண்டில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன .  இது சுவாச மண்டலத்தை சுத்தப்படுத்தி நாசிப் பாதையில் சளிப் படிவதை தடுத்து குறட்டையை குறைக்கும். 

இரண்டாவது 3 பூண்டு பற்களை எடுத்து சாப்பிட்ட பின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கவும் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் குறட்டை நிற்கும்.



வாசகர்கள் கருத்துகள்

Comments