தாய்ப்பால் சுரக்க அருமையான டிப்ஸ்

குழந்தை பிறந்த உடனே முதலில் கொடுக்கப்படும் ஊட்டச்சத்தான உணவு தாய்ப்பால். அது ஒரு சிலருக்கு தாரளமாக சுரக்கும். ஒரு சிலருக்கு மிக் குறைவாக இருக்கும். குழந்தையின் முதல் உணவு அது என்பதால், மருத்துவர்கள் அதிகம் பரிந்துரைப்பதும், இயற்கையான உணவு என்பதாலும் அதற்கு என்றுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இன்றைய இயந்தர உலகத்தில், உண்ணும் உணவும், வாழ்க்கை முறையும் மிக வேகமானது என்பதாலும், இயற்கையான வழிமுறைகளை கையாளதாதாலும் ஏற்பட்டுள்ள பின் விளைவுகளாகவே இந்த குறைபாட்டை பார்க்க முடியும். சரி, எப்படி தாய்ப்பாலை அதிகம் சுரக்க வைப்பது? என்ன காரணத்தால் அது சுரக்காமல் இருக்கிறது? என்னென்ன உணவுகளை உட்கொண்டால் குழந்தைக்குத் தேவையான தாய் பால் கிடைக்கும் என்பதை இங்கு அறிந்துகொள்வோம்.

தாய்ப்பால் சுரக்காமல் போவதற்கான காரணங்கள்: 1. புரலோக்சன் என்ற ஹார்மோன் உண்டு. அது பால்சுரக்க தூண்டுவது. அது குறைந்தால் பெண்களுக்கு பால் சுரப்பது குறையும்.
2. கர்ப்ப காலத்தில் போஷாக்கான உணவுகளை எடுத்துக்கொள்ளாத பெண்களுக்கு இயல்பாகவே பால் சுரத்தல் இன்றி இருக்கும்.
3. பரம்பரை ஜூன் வழியாக கடத்தப்படும் மரபு குறைபாடு காரணமாக சில பெண்களுக்கு பால் சுரப்பு அறவே இருக்காது. 
4. சிசேரியன் செய்துகொள்ளும் பெண்களுக்கு இந்த பிரச்னை அதிகம் வருவதுண்டு. காரணம் அவர்களால் சிசேரியனுக்குப் பிறகு ஒரு சிலநாட்கள் எழுந்து உட்கார்ந்து பால் கொடுக்க முடியாது. இதனால் குழந்தை மார் மீது வாய் வைத்து உறிஞ்சும் திறன் குறைந்துவிடும். இந்த காரணத்தால் பெண்களுக்கு பால் சுரப்பு குறையும். ஒரு சிலருக்கு சுரக்காமலே போய்விடும்.
5. நாட்பட்ட வியாதி உள்ளவர்களுக்கு, உதாரணமாக சர்க்கரை நோய், காசநோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருந்து, மாத்திரை சாப்பிட்டும் பெண்களுக்கு "பால் சுரத்தல்" குறைவாக இருக்கும். அல்லது இல்லாமல் இருக்கும்.
6. குறை பிரசவத்தில் குழந்தை பெறும் பெண்களுக்கு, நாட்கள் முழுமையாக ஆகாத்தால் இயல்பாகவே பால் சுரக்கும் தன்மை இல்லாமல் இருக்கும். 
7. குறிப்பிட்ட வயதிற்கு மேல் குழந்தை பெறும் பெண்களுக்கு பால் சுரப்பு இல்லாமல் இருக்கும். குறிப்பாக 40 வயதுக்கு மேல் குழந்தை பெறும் பெண்களுக்கு அது சுரப்பது அரிதாகவே நடக்கும். 
8. உடலில் எந்த பிரச்னையும் இன்றி இருக்கும் பெண்கள், மனதளவில் அன்றாடம் பாதிக்கப்பட்டால் கூட பால் சுரப்பு குறைந்து நின்றுவிடும். 

தாய்ப்பால் சுரக்க செய்திட வழிகள்

ஆங்கில மருத்துவத்தில் தாய்பால் சுரக்க லேக்டர் (Lactare), கேலக்ட் கிரான்யூல்ஸ் (Galact granules), சதாவரி போன்ற மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இது ஆயுர்வேத மாத்திரைகள் என்பதால் தாய்மார்க்களுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. 
மருத்துவர்கள் பரிந்துரைத்து, எழுதிக் கொடுத்தால் மட்டுமே, அவர்களின் ஆலோசனையின் பேரில் சாப்பிட வேண்டும். 

தாய்ப்பால் சுரந்திட இயற்கை வழிகள்: 


1. வெற்றிலையை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்டினால் தாய்ப்பாலானது அதிகம் சுரக்கும்.
2. கஞ்சியில் வெந்தயத்தைச் கலந்து காய்ச்சிக் குடுத்தால் பால் அதிகம் சுரக்கும்.
3. வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி சிறிது சர்க்கரை கலந்து குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
4. சீரகத்தை வறுத்து நன்கு பொடியாக்கி சீரகம் எவ்வளவு எடுத்தீர்களோ அதே அளவு வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
5. பூண்டை பாலில் சேர்த்து காய்ச்சி குடித்தால் பால் அதிகமாக சுரக்கும்.
6. முருங்கை கீரையை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
7. பால் பெருக்கி என்னும் இலையை அரைத்து சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
8. கோவைக்காய் இலையை பூண்டுடன் சேர்த்து நெய்யில் வதக்கி தினமும் காலை வேளையில் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும்.
9. அதிமதுர பொடியை சிறிது பாலுடன் சர்க்கரையும் சேர்த்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் தாய்பால் சுரப்பு அதிகரிக்கும்.
10. பாவக்காய் இலையை அரைத்து மார்பகங்களில் பற்றுப் போல போட்டு வந்தால் தாய்பால் சுரக்கும்.
11. அருகம்புல் சாற்றுடன் தேன் சேர்த்து குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
12. அரைக்கீரை அடிகடி உணவில் சேர்த்து கொண்டால் தாய்ப்பால் பெருகும்.
13. அகத்தி கீரை இலையைச் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
14. முருங்கை கீரையையும், பாசிபருப்பையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாய்பாலானது அதிகம் சுரக்கும்.
15. வெள்ளை பூண்டை நல்லெண்ணெய் சேர்த்து வதக்கி அதனுடன் கருப்பட்டியை சேர்த்து சாப்பிட்டால் தாய்பால் அதிகம் சுரக்கும்.
16. சுறா மீனை புட்டு போல செய்து அதில் அதிக அளவு பூண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாய்பால் அதிகம் சுரக்கும்.

மேற்கண்ட இந்த வழிகளில் எது உங்களுக்கு ஏற்றதாக இருக்குமோ அவற்றை உங்கள் உணவில் சேர்த்து வந்தால் தாய்பால் பற்றாகுறை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. உங்களுக்கு போதுமான அளவு பால் சுரப்பதற்க்கும் உங்கள் குழந்தையின் பசியை போக்குவதற்கும் இந்த உணவு முறைகளை நீங்கள் பின்பற்றினால் போதும்.

Post a Comment

0 Comments