என்றோ ஏதோ ஒரு நிகழ்ச்சியில் உதாரணமாக "குட்டி கதை" சொல்லப் போய் அது விஜய் சேதுபதிக்கு எதிராக திரும்பியுள்ளது. இந்த கோயிலில் நடக்கும் சம்பிரதாயங்களை மறைமுகமாக இழிவு படுத்தியுள்ளதாக ஒரு வருடம் கழித்து அவர் மீது வழக்குகள் பாய்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் இந்து அமைப்பினர் அவரின் பேச்சுக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்துவரான விஜய் சேதுபதி பிரபல டிவி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக இருந்து வந்தார். அதன் ஒரு எபிசோடில் குறிப்பிட்ட நிகழ்வுக்கு உதாரணம் காட்ட அவர் சொன்ன குட்டி கதையில் இந்து கோவிலில் , கடவுளுக்கு நீர் ஊற்றி அபிசேகம் செய்யும்பொழுது அவரை அப்படியே காட்டுவதாகவும், ஆடை அலங்காரங்கள் செய்யும்பொழுது மறைப்பு போட்டு மறைப்பதாகவும் கூறியிருந்தார். இது இந்து மத நம்பிக்கையை அவமதிப்பதாகவும், சாஸ்திர சம்பிரதாயங்களை நகைப்புக்கு உள்ளாக்கியதாகவும், சிலர் அவர் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.
அவரைப் பொறுத்தவரை அது ஒரு சிறிய உதாரண கதையே தவிர, இந்து மத கடவுகள்களையோ, அது சார்ந்த நம்பிக்கைகளை இழிவு படுத்துவதாக இல்லை என தெளிவாக கூறிவிட்டார். குறிப்பாக எந்த ஒரு விஷயத்துக்கும் அலட்டிக்கொள்ளாத விஜய், இந்த பிரச்னையை பூதகரமாக மீடியா வெளி உலகுக்கு கொண்டு வந்தபோது சற்று அசந்தே போய்விட்டார்.
கடந்த காலங்களில் அவ்வப்போது இந்து இறை நம்பிக்கையை கொச்சைப்படுத்தி பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத இந்துக்கள், தற்போது யார் தங்கள் மதத்திற்கு எதிராக பேசினாலும் வெகுண்டு எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு எழுச்சி அடைந்துள்ளனர். அந்த வரிசையில் நடிகர் ஜோசப் விஜய், நடிகர் சிவகுமார், நடிகை ஜோதிகா, இயக்குனர் சமுத்திரக்கனி, நடிகர் சூர்யா, நடிகர் விஜய்சேதுபதி, நடிகர் சீமான், நடிகர் கமல்… ஆகியோர் மக்கள் மத்தியில் உள்ள தங்கள் நன்மதிப்பை இந்து மத எதிர்ப்பு பிரச்சாரத்தின் மூலம் தங்களாவே மக்கள் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்துள்ளனர்.
நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2019ஆம் ஆண்டு ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து கோவில் சாமி சிலைக்கு நடைபெறும் அபிஷேகம் குறித்து இந்துக்கள் மனம் புன்படும்படி பேசிய பேச்சு, தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்து அமைப்புகள் ஓன்று கூடி நடிகர் விஜய் சேதுபதிக்கு பாடம் கற்பித்தே ஆக வேண்டும் என முடிவெடுத்து, தமிழகம் முழுவதும் அவர் மீது காவல் நிலையங்களில் புகார் கொடுத்து வருகின்றனர்.
இந்து மகா சபையினர் திருச்சி காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்து முன்னணியினர் திருநெல்வேலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இந்து அமைப்பை சேர்ந்த பலர் தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்து வருகின்றனர். காவல்துறை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றம் சென்று நடிகர் விஜய் சேதுபதி மீது அவருக்கு தக்க பாடம் புகட்ட முடிவெடுத்துள்ளது இந்து அமைப்புகள்.
நடிகர் விஜய் சேதுபதியை நீதிமன்றத்திற்கும், வீட்டிற்கு அலைய விடுவதன் மூலம் அவரால் சினிமா படப்பிடிப்புக்கு செல்ல முடியாமல் போகும். இதனால் விஜய் சேதுபதியை சினிமாவில் நடிக்க ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டுவார்கள். இது மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும், எனவே நடிகர் விஜய் சேதுபதியை சினிமாவில் இருந்து விரட்டாமல் ஓயமாட்டோம் என இந்து அமைப்பினர் சபதம் எடுத்துள்ளனர்.

வாசகர்கள் கருத்துகள்