பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு ஏறக்குறைய 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் குழந்தைகளை வீட்டிலேயே அடைத்து வைத்து, அவர்களின் செயல்பாடுகளை முடக்கி வைத்திருக்கிறோம். நோய்க்கு பயந்து வீட்டில் முடங்கியதால் ஏற்பட்ட பின் விளைவுகள் ஏராளம். வசதி உள்ளவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் அல்லது வெட்ட வெளியில் விளையாடி இயல்பான வாழ்க்கையை வாழ முயற்சிக்கின்றனர். என்றாலும் கூட , அங்கும் பிள்ளைகளை குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வெளியில் நடமாட முடியாத வகையில் அடைத்து வைத்து விடுகின்றனர்.
இது ஒரு வகையில் பிள்ளைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை நாமே தடுத்து வைப்பது போல ஆகிவிடும். எந்த நிலையிலான பிள்ளைகளாக இருந்தாலும் சரி. தாய்மார்கள் அவர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம். இதுபோன்ற கொள்ளை நோய் தொற்றும் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவர்களின் கையில்தான் உள்ளது.
தேவையான பொருட்கள்:
பெரிய நெல்லிக்காய் - 10,
தேன் - 100 மில்லி.
செய்முறை:
நெல்லிக்காயைக் கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து உதிர்த்து கொட்டையை எடுக்கவும்.

வெறும் வாணலியில் உதிர்த்த நெல்லிக்காயைப் போட்டு சிறிது வதக்கிக்கொள்ளவும்.
வதக்கிய நெல்லிக்காயை ஒரு பாட்டிலில் போட்டு நெல்லிக்காய் மூழ்கும் வரை தேன் ஊற்றிவைக்கவும்.
தேனில் ஊறி, தேன் சுவையும் நெல்லிக்காயின் சுவையும் சேர்ந்து மிகவும் நன்றாக இருக்கும்.

வெயிலில் விளையாடினால் விட்டமின் D இயற்கையாகவே கிடைக்கும். ஆனால் நகரங்களில் வசிக்கும் பிள்ளைகளுக்கு அந்த வாய்ப்புகள் மிக குறைவுதான். இதபோன்ற சமயங்களில் விட்டமின் டி யை அதிகரித்து பிள்ளைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்திட "நெல்லிக்கனி" நிச்சயமாக பயன்படும். செய்து பாருங்கள். "மல்டி விட்டமின்" உங்கள் குழந்தைகளுக்கு நிச்சயம் இது கொடுக்கும்.
தேவையான பொருட்கள்:
பெரிய நெல்லிக்காய் - 10,
தேன் - 100 மில்லி.
செய்முறை:
நெல்லிக்காயைக் கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து உதிர்த்து கொட்டையை எடுக்கவும்.

வெறும் வாணலியில் உதிர்த்த நெல்லிக்காயைப் போட்டு சிறிது வதக்கிக்கொள்ளவும்.
வதக்கிய நெல்லிக்காயை ஒரு பாட்டிலில் போட்டு நெல்லிக்காய் மூழ்கும் வரை தேன் ஊற்றிவைக்கவும்.
தேனில் ஊறி, தேன் சுவையும் நெல்லிக்காயின் சுவையும் சேர்ந்து மிகவும் நன்றாக இருக்கும்.

வாசகர்கள் கருத்துகள்