FB YT IG

சினிமாவில் தான் காமெடியன். ஆனால் நிஜத்தில் ஹீரோ... பரோட்டா சூரிக்கு குவியும் பாராட்டுகள் !!!

Post Image
சிலர் சினிமா படத்தில் உலகம் போற்றும் ஹீரோவாக இருந்தும், மக்களுக்கு பெரிதாக ஏதும் செய்யாமல் சுயநலமாக தனது பிள்ளை, பெணாட்டிகள், வாரிசுகள், சொந்த பந்தங்கள் என அவர்களின் வாழ்க்கை மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று குறுகிய மனதுடன் செயல்படுவார்கள். தமிழில் சில முன்னணி ஹீரோக்கள் அப்படித்தான் இன்றும் செயல்படுகிறார்கள்.

போதுமான அளவுக்கு பணம் , சொத்து சம்பாதித்தும் கூட இன்னும் போதாமல் அவர்கள் செய்யும் செயல்கள் சில நேரங்களில் சினிமா ரசிகர்களை எரிச்சல் ஊட்ட வைக்கும். ஆனால் "கஞ்ஞா கருப்பு" "சூரி" போன்ற காமெடியன்கள் தங்கள் ஊருக்கு செய்யும் செயல்களால் ஹீரோவாக பார்க்கப்படுகிறார்கள்.

parotta suri hero


கஞ்சா கருப்பு தனது போர்வெல் நிறுவனத்தின் மூலம் தன்னுடைய கிராமத்திற்கு இலவசமாக போர் போட்டு தண்ணீர் வசதியை செய்து கொடுத்தார் என்றால், சூரி ஒரு கட்டம் மேலே போய், ஏழைகளுக்குத் தேவையான உணவு உதவிகளை செய்து வருகிறார்கள். அது மட்டுமா தன்னுடைய ஓட்டலில் வேலை செய்து வரும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பும் வழங்கி, அவர்களுடைய வாழ்த்துகளை பெற்றுள்ளார்.

சூரி வாங்கும் சம்பளத்ததில் தனக்கு என பெரிதாக எதையும் எடுத்துக்கொள்வதில்லை. தன்னுடைய சகோதர ர்கள்,சகோதரிகள் குடும்பம் மற்றும் உள்ளூர் வாசிகளுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

இந்த லாக்டவுன் காலத்தில் தன்னுடைய ஓட்டலில் வேலை செய்பவர்களுக்கு முழு சம்பளத்துடன் , பாதுக்காப்பாக ஊர் போய் சேர வேண்டிய வசதிகளை செய்த தோடு மட்டும்மல்ல்லாம்ல், இந்த 3 மாத்ததிற்கும் தேவையான அவசிய வசதிகள் , முழு சம்பளம் போன்றவற்றை கொடுத்து நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறார். தன்னுடைய கள்ளம் கபடமற்ற குணத்தால் அனைவரையும் கவர்ந்திருக்கும் "பரோட்ட சூரி" அதிகம் படிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது.


வாசகர்கள் கருத்துகள்

Comments