குஷ்பூ இடுப்பில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா? தெரிந்தால் ஷா க் ஆவீங்க ! விபரம் உள்ளே !!!

கே டிவி பார்த்துட்டே இருந்தோம். அப்ப நம் கண்ணில் ஒரு காட்சி தென்பட்டது. அதாவது நடிகை குஷ்பு இடுப்பில் ஒரு குழந்தை இருந்தது. அந்தக் குழந்தை யார்னு தெரியுமா.. வாங்க தொடர்ந்து படிச்சு தெரிஞ்சுக்கங்க.

லாக்டோன் டைம் என்பதால் பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போய்க் கிடக்கிறார்கள். எல்லோருக்கும் இப்போது பெரிய பொழுது போக்காக இருப்பது டிவிதான். ஆனால் பாருங்க அதிலும் கூட கொரோனா பலி, கொரோனா பாதிப்புன்னு மக்களுக்கு டென்ஷன்தான் அதிகம்.சரி சீரியல் பக்கம் போலாம்னு பார்த்தா புது எபிசோடுகளைக் காணோம். எல்லாமே பழசுதான். ரிப்பீட்தான். ஏதோ அரசாங்கத்தின் புண்ணியத்தால் இப்போது கொஞ்சம் பாதுகாப்போடு ஷூட்டிங்குகளை ஆரம்பிச்சிருக்காங்க.

படமா பார்க்கிறாங்க
மக்களுக்கு இந்த நேரத்தில் மிகச் சிறந்த பொழுது போக்காக இருப்பது இந்த ஓடிடி சானல்களும், டிவி சானல்களில் காட்டப்படும் படங்களும்தான். அதிலும் ஓடிடி சானல்களில் புத்தம் புதுப் படங்களையே டைரக்டகா ரிலீஸ் செய்ய ஆரம்பித்து விட்டனர். .மக்களும் செம ஜாலியாக பைசா செலவில்லாமல் திரும்பத் திரும்பப் பார்த்து என்ஜாய் செய்கின்றனர்.


20, 30 படங்கள்
அதேபோல டிவி சானல்களிலும் படங்கள்தான். ஒரு நாளைக்குக் குறைந்தது 20 படங்களாக போடுகிறார்கள் மொத்தமாக எல்லா சேனல்களிலும். எதைப் பார்க்க எதை விட என்றே தெரியவில்லை. இதில் ஒரு லாபம் இருக்கிறது. நமக்குப் பிடித்த நமது மனம் கவர்ந்த படங்கள் பலவற்றை அழகாக பார்க்க முடிகிறது .அதை வைத்து கொஞ்சம் பொழுது ஓடி விடுகிறது. ஒவ்வொரு நாளையும் இப்படித்தான் கழிக்கிறார்கள் பலரும்.


குட்டி பாப்பா ஜெனீபர்
இப்படித்தான் கே டிவி பார்த்தோம் .அதில் கிழக்குக் கரை என்று ஒரு படம் .அந்தக் காலத்துப் படம். நல்லா ஓடிய படமும் கூட. 1991ம் ஆண்டு இந்தப் படம் வெளியாகிருக்கங்க .பிரபு குஷ்பு இணைந்து நடித்த படம். பி. வாசுதான் இதை இயக்கியிருப்பார். ரொம்ப நல்லா ஓடுச்சு. காரணம் பிரபு குஷ்புவுக்கு அப்போது செம ஜோடிப் பொருத்தம் என்பதால் படம் நல்லா ஓடியது. தேவாதான் மியூசிக் போட்டிருப்பார்.

குஷ்பு இடுப்பில் ஜெனீபர்
இந்தப் படம்தான் கேடிவியில் ஓடியது. அதில் குஷ்பு இடுப்பில் ஒரு குட்டிப் பாப்பா உட்கார்ந்திருப்பார். அதைப் பார்த்தபோதுதான் அடடா இதை எங்கேயோ பாத்திருக்கோமே என்று மனசில் வருடியது.. யார்னு பார்த்தா நம்ம ஜெனீபர். அதாங்க நேருக்கு நேர் படத்தில் நடித்திருப்பாரா குட்டிப் பார்ப்பா அவர்தான். இன்னும் புரியலையா.. கில்லி படத்தில் விஜய்யின் தங்கச்சியாக வருவாரே அவரேதான் இந்த குட்டிப் பாப்பா.


நான்சி ஜெனீபர்
குஷ்பு இடுப்பில் அமர்ந்து இருக்கும் அந்தப் பாப்பாதான் இப்போது வளர்ந்து ஹீரோயின் ரேஞ்சுக்கு உருவாகி நிற்கிறார். ஜெனீபரோட உண்மையான பெயர் என்ன தெரியுமா.. நான்சி ஜெனீபர். 1990ம் ஆண்டு பிறந்திருக்காங்க. இப்ப அவருக்கு வயது 30 ஆகிறது. கிழக்கு கரைதான் அவரோட முதல் படம். அப்ப அவருக்குப் பெயர் பேபி ஜெனீபர். அந்தப் படத்தைத் தொடர்ந்து சில படங்களில் பேபியாகவே நடித்திருக்கிறார்.

முன்னாள் பேபி
பேபி ஷாலினி, பேபி ஷாமிலி வரிசையில் பேபி ஜெனீபரும் அப்போது நல்ல டிமாண்டில்தான் இருந்துள்ளார். நேருக்கு நேர் படத்தில்தான் அவர் நல்லா கவனிக்கப்பட்டார். அந்தப் படத்திற்குப் பிறகு வரிசையாக சில படங்களில் நடித்தார். இவருக்கு ஒரு சோகக் கதை உண்டு.. அம்மாவும் அப்பாவும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டவர்கள். இதனால் இருவரின் அன்பையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க முடியாத துயரம் இவருக்கு உண்டுங்க.


விஜய் தங்கச்சி புவனா
சோத்தையும் தாண்டி நடிப்பில் கவனம் செலுத்திய இவருக்கு அசோகவனம் படமும், கில்லி படமும் நல்ல பெயரைக் கொடுத்தது. குறிப்பாக கில்லி படத்தில் சோடா புட்டி கண்ணாடி போட்டுக் கொண்டு புவனா என்ற வேடத்தில் அசத்தியிருப்பாருங்க.. அதுதான் இவருக்கு பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்தது. விஜய் ரசிகர்களின் செல்லத் தங்கச்சியாகவும் இதன் பிறகு அவர் பார்க்கப்பட்டார்.


ஹீரோயினாகவும் கலக்கல்
பின்னர் படிப்படியாக ஹீரோயின் ஆனார். தோழா, புதிய பயணம் ஆகிய படங்களில் ஹீரோயினாக வந்தார். ஆனால் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும் சின்ன சின்ன ரோல்களில் நடித்துள்ளார் .இவர் நடித்த முக்கியப் படங்கள்னு பார்த்தால் நேருக்கு நேர், உளவுத்துறை, கில்லி, உனக்கும் எனக்கும், தீயாய் வேலை செய்யணும் குமாரு ஆகியவைதான்.

டிவியில் ஜெனீபர்
ஜெனீபர் டிவியிலும் நடித்துள்ளார். விஜய் டிவியில் வந்த தாயுமானவன் தொடரில் இந்திரா என்ற வேடத்தில் நடித்தார். பின்னர் சன் டிவியில் வெளியான கேளடி கண்மணி தொடரில் நாகேஸ்வரி என்ற வேடத்தில் வந்தார். பிறகு வள்ளி தொடரில் பிருந்தா வேடத்தில் நடித்தார். ஸ்டார் வார்ஸ் என்ற தொடரில் அவராகவே வந்து போனார். ஜெனீபர் பெரிய லெவலுக்கு வந்திருக்க வேண்டியவர். ஆனால் அவருக்கு அதிர்ஷ்டம்தான் இன்னும் கதவைத் தட்டாமல் உள்ளது.

Post a Comment

0 Comments