1.தினமும் எட்டு மணிநேரம் நன்றாக தூங்க வேண்டும்.
2.காலை உணவு கண்டிப்பாக எட்டு மணிக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.
3.புகைபிடிப்பதால் பல்வேறு உடல்நல கேடுகள் உண்டு என்றாலும் வயது முதிர்ச்சியை இது துரிதப்படுத்துகிறது. சீக்கிரமாக முடி நரைத்து விடுகிறது. தோல்களில் சுருக்கம் ஏற்படுகிறது.
4. வாரம் இரண்டு முறை எண்ணெய் குளியல் உடல் சூட்டை தணித்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
5. விட்டமின் சி அதிகம் நிறைந்த பழங்கள் வயது முதிர்வை தள்ளி போட உதவுகின்றன.
6.யோகாசனம், மூச்சு பயிற்சி செய்வதன் மூலம் என்றும் இளமையாக வாழலாம். இதற்கு கண்கண்ட உதாரணம் நடிகர் சிவகுமார்.
7.குறைந்தது இருபது நிமிடம் உடற்பயிற்சி தினமும் செய்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
8.அப்படி உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் உங்களுக்கு பிடித்த விளையாட்டினை தேர்ந்து எடுத்து விளையாடலாம். இதனால் வியர்வை மூலம் கழிவு வெளியேறுவதுடன் உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.
9.இதயத்தினை பலமுள்ளதாக வைத்துக் கொள்ள ஒட்டப்பயிற்சி அவசியம்.ஒட முடியவில்லை என்றால் வேகமாக நடக்கலாம்.
10. தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம்.
11.கந்தையானாலும் கசக்கி கட்டு,கூழானாலும் குளித்து குடி.
12.சர்க்கரையை தவிர்த்து பனைவெல்லம், பனங்கற்கண்டு பயன்படுத்துவது நலம்.
13.தினமும் இரு முறை பல் துலக்குவது பல்வேறு வகையான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
14.இரவில் அதிக நேரம் விழித்து இருந்தால் நீங்கள் சீக்கிரமாக வயதான தோற்றத்தை அடைந்து விடுவீர்கள்.
15.ஆண்டுக்கு இருமுறை பேதி மாத்திரை சாப்பிட்டு குடலை சுத்தப்படுத்தி கொள்வது, மாதம் இரண்டு முறை மனைவி/கணவனுடன் உடலுறவு, வாரம் இரண்டு முறை எண்ணைய் குளியல். நம்மை ஆரோக்கியமான வாழ்வை நல்கும்.
வாசகர்கள் கருத்துகள்