எலுமிச்சை ஜூஸ் 3 விதமாக சுவையா இப்படி செய்யுங்க
எலுமிச்சம்பழம் ஜூஸ் இப்படி போட்டு குடீங்க கொஞ்சம் கூட மீதியாகாது.எலுமிச்சம் பழத்தை வைத்து மூன்று வகையான ஜூஸ் எப்படி போடுவது என்பதை பார்ப்போம்.
முதலில் எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி சாறை நன்றாக பிரிந்து எடுக்கவும் தோல் பகுதியை நன்றாக கசக்க கூடாது ஏனென்றால் அதில் உள்ள கசப்பு தன்மை இறங்கினால் ஜூஸ் குடிக்க சுவையாக இருக்காது .ஆதலால் சாரை நன்றாக எடுத்து மீதியுள்ள அந்த தோல் பகுதியை குப்பையில் போடாமல் அதனை பாத்திரங்கள் தேய்க்க பயன்படுத்தலாம்.
செய்முறை 1:
மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்துள்ள எலுமிச்சை சாறு ஊற்றி அதனுடன் சர்க்கரை சிறிதளவு ,சிறிதளவு உப்பு மற்றும் ஐஸ் தண்ணியை ஊற்றி நன்றாக அரைக்கவும் பின்பு அதனை வடிகாட்டி ஊற்றி கொடுத்தால் குழந்தைகள் நன்றாக குடிப்பார்கள் ,மேலும் இது உடம்பிற்கு குளிர்ச்சியை தரும்.
செய்முறை 2
எலுமிச்சை பழ சாறு சிறிதளவு ,புதினா இலை, நாட்டுச் சர்க்கரை மற்றும் தண்ணீர் போட்டு நன்றாக மிக்ஸியில் அரைக்கவும் பின்னர் வடிகட்டி குடித்தால் ,இது வயிறு உப்புசம் மற்றும் ஜீரணக் கோளாறுகளுக்கு ஒரு மிகச்சிறந்த ஜூஸ் ஆகும்.
செய்முறை 3
எலுமிச்சை பழச்சாறு சிறிதளவு, அதனுடன் சிறிதளவு சர்க்கரை, சிறிதளவு உப்பு ,இரண்டு மூன்று துண்டுகள் ஐஸ் கட்டிகள் மற்றும் இதனை நன்றாக அரைத்து பின்பு சர்ஜா விதைகளை போட்டு நன்றாக அரைத்து வடிகட்டி குடிக்கலாம்.
வாசகர்கள் கருத்துகள்