காரமான சாப்பாடு சாப்பிட்ட பின் வாய் எரிச்சலா இருக்கா !! அப்ப உடனே இதை சாப்பிடுங்க சரியாகிவிடும்...
நம்மில் பலருக்கு காரமான உணவுகளின் மீது ஒரு அலாதி பிரியம் உண்டு ஆனால் சாப்பிட்ட பின் வாய் எரிச்சல், நாக்கு மற்றும் உதடுகளில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும்.
எரிச்சல் உணவிற்கு காரணம் மிளகாய் அல்லது மசாலா பொருட்களில் உள்ள காரம் ஆகும்.
வாய் எரிச்சல் அதிகமாக இருக்கும் போது அதை தாங்கிக் கொள்ள முடியாமல் நம்மில் பலர் அடிக்கடி நிறைய தண்ணீர் குடிப்போம் ஆனால் அது அந்த எரிச்சலை நீக்காது.
பால் பொருட்கள்
தயிர் பாலாடை கட்டி போன்ற பல்வேறு உணவுகளில் எரிச்சலை குறைக்கும் சத்துக்கள் உள்ளன.
ஆகவே இந்த எரிச்சல் உணர்வை தாங்காமல் இருக்கும் போது பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட தயிர் மற்றும் பாலாடை கட்டி சாப்பிடுவதால் எரிச்சலை குறைக்கலாம்.
ஐஸ் கட்டி
அதிக காரத்தை உணரும்போது நாம் சிறிது குளிர்ச்சியான தண்ணீர் அல்லது ஐஸ்கட்டி ஒரு துண்டினை வாயில் போட்டால் எரிச்சல் உணர்வு விரைவில் ஆறிவிடும்.
தேன்
ஒரு டம்ளரில் வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் சிறிது தேனை கலக்கவும் கலந்த பின் தண்ணீரை உட்கொள்ளுங்கள் இது மிகவும் அதிக காரத்தன்மை உள்ள உணவுகளை உட்கொள்ளும் போது எடுத்துக் கொண்டால் மிகவும் நன்மை பயக்கும்.
பிரட்
மருத்துவர்களின் கூற்றுப்படி ஒரு துண்டு பிரட் சாப்பிடுவதால் காரமான உணவுகளால் ஏற்படும் காரத்தை உற்பத்தி செய்யும் உமிழ்நீர் உறிஞ்சப்படும் இதன் மூலம் படிப்படியாக காரணம் குறைந்து வாயில் எரியும் உணர்வையும் குறைத்து விடும்.
.png)
.png)
.png)
.png)
வாசகர்கள் கருத்துகள்