தொட்டால் சிணுங்கி செடியின் மருத்துவ பயன்கள்....
தொட்டால் சிணுங்கி ஒரு சிறு செடி வகையை சார்ந்தது இது தமிழ்நாட்டின் அனைத்து பக்கங்களிலும் காணப்படுகிறது. பெரும்பாலும் ஆற்று ஓரங்களில் அதிகம் காணப்படும்.
இதன் பூக்கள் ஊதா நிறத்தில் இருக்கும்.
தொட்டால் சிணுங்கி செடியானது முக்கியமாக தோல் வியாதிகள் ,குழந்தை பேறு பிரச்சனை, ஆண்மை குறைபாடு மற்றும் பல பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலகையாக உள்ளது.
நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய தொட்டால் சிணுங்கியின் பயன்களை பற்றி பார்ப்போம்.
கல் அடைப்பு நீக்கம்
வேர் மற்றும் இலையை ஒரு பாத்திரத்தில் போட்ட அதில் அந்த இலை மற்றும் வேர் மூழ்கும்படி தண்ணீர் ஊற்றவும் தண்ணீர் ஊட்டையுடன் அடுப்பில் ஏற்றி நன்றாக காய்ந்து சுண்டிய பின் அதனை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று வேளை கொடுத்து வந்தால் கல்லடைப்பு எளிதாக தீரும்.
ஆண்மை குறைபாடு
இக் குறைபாடு உள்ளவர்கள் தொட்டால் சிணுங்கி அரைத்து அதனை பாலில் கலந்து குடித்து வந்தால் எளிதாக இந்த பிரச்சனையை சரி செய்து விடலாம்.
சிறுநீர் எரிச்சல்
வெயில் காலங்களில் நம்மில் பல பேர் இந்த சூடு பிடிக்கிறது என்று கூறும் சிறுநீர் எரிச்சலுக்கு உள்ளாகிறார்கள் .இதற்கு தொட்டால் சிணுங்கி அரைத்து ஐந்து முதல் ஆறு நாட்கள் காலை தயிரில் கலந்து சாப்பிட்டு வர உடல் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
தேமல்
தோல் பிரச்சினை உள்ளவர்கள் அதாவது தோலில் ஏற்படும் படைத் தேமல் போன்ற நோய்களுக்கு தொட்டால் சிணுங்கி இலை பெரிதும் உதவுகிறது.
நன்றாக அரைத்து தேமல் படை உள்ள இடத்தில் கொண்டு வந்தால் விரைவில் புண்கள் குணமாகும்.
0 Comments