குழந்தைங்க மீன் சாப்பிடும் போது தொண்டையில் மீன் சிக்கிக்கிச்சா ... அப்ப இதை உடனே செய்ங்க !!
மீன் சாப்பிடும் போது பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் கவனமாக சாப்பிட வேண்டும் ஏனென்றால் தொண்டையில் முள் குத்தினால் வலி அதிகமாக இருக்கும் அது உயிருக்கும் மிகவும் ஆபத்து விளைவிக்கும்.
பிறருக்கு இதுவே பெரிய பிரச்சினையில் கொண்டு போய் முடியும்.
எனவே மீன் முள் தொண்டையில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்பதை தற்போது பார்க்கலாம்.
அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றால் அது மீன் தான் ஆனால் அதில் இருக்கும் பெரிய பிரச்சினையே இந்த முள் தான்.ஆனால் சில சமயங்களில் இந்த தொண்டையில் சிக்கி நம்மை பாடாய்படுத்தி எடுத்து விடுகிறது.
ஆதலால் நாம் அனைவரும் மீனை சாப்பிடும் போது மிகவும் ஜாக்கிரவையாக இருக்க வேண்டும்.
மீன் தொண்டையில் மாட்டிக் கொண்டால் நாம் அசௌகரியமாக உணர்வோம்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தை ஒரு பெரிய துண்டாக நறுக்கி அதனை வாயிலிட்டு சிறிது நேரம் தொண்டையில் வைத்திருந்தால் அங்கு உள்ள உமிழ்நீரை வாழைப்பழம் உறிஞ்சி அங்கே உள்ள முள் வாழைப்பழத்துடன் சேர்ந்து உணவு குழாய்க்கு சென்று விடும்.
சாதம்
முள் தொண்டையில் மாட்டிக்கொண்டால் மிக எளிதான மழை சாதத்தை உறுதியாக பிடித்த அதனை முழுங்குங்கள் முழுங்கினால் முள் வயிற்றுக்குள் தள்ளி விடப்படும்.
உப்பு மற்றும் நீர்
நாம் சாப்பிடும் மீன் சிறியதாக அல்லது சிறிய முள்ளாக தெரிந்தால் அப்பொழுது ஒரு டம்ளரில் சேது உப்பை போட்டு நன்றாக கொப்பளித்துக் குடியுங்கள் முள் வயிற்றுக்குள் இறங்கிவிடும்.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில் அதிக பிசுபிசுப்பு தன்மை கொண்டதால் இது தொண்டையில் மாட்டிக் கொண்ட முல்லை எளிதாக எடுக்க உதவுகிறது இந்த ஆலிவ் ஆயிலை சிறிது வாயில் ஊற்றி விளங்கும்போது அந்த வழுவழுப்பு தன்மை காரணமாக முள்ளும் சேர்ந்து வயிற்றுக்குள் வந்து சேர்ந்துவிடும்.
மிகவும் முக்கியமாக இந்த டிப்ஸ்களை குழந்தைகளுக்கு பயன்படுத்துங்கள் ஏனென்றால் குழந்தைகள்தான் மீனை சாப்பிடும் போது கவனக்குறைவாக உண்பார்கள் இதனை பெரியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம்.
0 Comments