Lemon skin that enhances beauty...
அழகை அதிகரிக்கும் எலுமிச்சை தோலின் நன்மைகள்..
எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்த பின் அதன் தோலை தூக்கி எறிந்து விடுவது வழக்கம். ஆனால் எலுமிச்சை சாற்றில் உள்ளது போலவே அதன் தோலிலும் பல நன்மைகள் உள்ளன.
உச்சி முதல் பாதம் வரை அழகை பராமரிப்பதற்கு எலுமிச்சை தோல் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதில் விட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளன.
எலுமிச்சை தோலில் உள்ள சத்துக்கள் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது.
உடலில் உள்ள குருத்து எலும்புகள், தசைநார்கள், தோல் ஹார்மோன் ஆகியவற்றின் ஆரோக்கியத்துக்கும் சீரான செயல்பாட்டுக்கும் உதவுகிறது.
ரத்தக்குழாய் சுவர்களின் நெகிழ்வு தன்மையை அதிகரிக்கிறது, இதனால் இதயம் சீராக இயங்கும்.
இதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்ட்கள் பெருங்குடல் மற்றும் மார்பக புற்றுநோயை தடுக்கின்றன. கரோட்டினாய்டு நிறமிகள் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றன.
பிளேவனாய்டுகள் கெட்ட கொழுப்பை கரைக்கின்றன.
வாசகர்கள் கருத்துகள்