செரிமான கோளாறு சரி செய்யும் சீரகம்

செரிமானக் கோளாறு பிரச்னை தீர இயற்கை வைத்தியம்

பசியின்மை - ருசியின்மை - புளித்த ஏப்பம் - நெஞ்செரிச்சல் - வயிற்று உப்புசம். இந்தக் கோளாறுகள் இன்றைய அவசர உலகில் அனைவருக்கும் ஏற்படும் ஒரு வியாதி. இது முற்றினால் வயிற்றுப்புண் (அல்சர்) ஏற்படும்.
ajjerana kolaru
அஜீரண கோளாறு

இதற்கு எளிமையான மருந்து சீரகம். சீராக உள் உறுப்புகளைக் காப்பதால் இதற்குச் சீரகம் என்ற காரணப்பெயர்.

நூறு கிராம சீரகத்தை மண்சட்டியில் காப்பிபொடி நிறம் வரும் வரை நன்கு வறுக்கவும். அதனை நன்கு பொடி செய்து பாட்டிலில் பத்திரப்படுத்தவும். தினமும் மூன்று வேளை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வெந்நீர் அருந்தவும்.

நல்ல நிவாரணம் கிடைக்கும். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம். சின்னஞ்சிறு குழந்தைகளுக்குத் தேனில் குழைத்துக் கொடுக்கலாம்.

Post a Comment

0 Comments