இப்பொழுது மழைக்காலம். எந்த ஒரு மாட மாளிகை என்றாலும் கூட, அதில் பூச்சி புகுந்து நமக்குத் தொல்லைத்தரும். லைட் வெளிச்சம் கண்டவுடன் மாலை 6 மணி முதல் 8 மணி வரை அதன் ஆட்டம் ஓயாது. காதில் காதில் எறும்பு/வண்டு/ஈ/பூச்சிகள் புகுந்தால் தொல்லை அதிகமாகும். அதை எடுப்பது சுலமல்ல.
சிறு குழந்தைகள், வயதானவர்கள் இருக்கும் வீட்டில் மெத்தையில் கூட அந்த பூச்சிகள் சில நேரம் ஒளிந்துகொண்டு, இரவு விளக்கு ஏற்றும்போது, ஊர்ந்து வந்து நம்மை தொல்லைப்படுத்தும். சில நேரங்களில் உடலில் கடித்து, அரிப்பு, வீக்கம் ஏற்படும்.
ஒரு சில பூச்சிகள் கடித்தால் கொப்புளம் போட்டு, கொப்புளித்த இடத்தில் நீர் வரும். பிச்சிக்கொள்ளும். பிப்பு எடுக்கும்பொழுது சொரிந்தால் இதமாக இருக்கும். ஆனால் அந்த இடத்தில் சிவந்து தடித்துக்கொள்ளும்.
அந்த நீர் படும் இடங்களிலெல்லாம் அதே போல சிவந்த திட்டுகள் உருவாகி மீண்டும் அந்த இடத்தில் அரிப்பு ஏற்படும். இது மேற்புறத்தோலில் ஏற்படும் பாதிப்புகள். அதே நேரத்தில் அந்த பூச்சிகள் மூக்கு, கண், காதுகளில் புகுந்தால் எரிச்சல் மிகும்.

கண்கள், மூக்கு துவாரங்களில் பூச்சிகள் விழுந்தால் அதை உடனடியா, அனிச்சையாக அந்த பூச்சியை வெளித்தள்ளும் திறனை நம் உடல் இயல்பாகவே கொண்டுள்ளது.
ஆனால் காதில் பூச்சி நுழைந்தால் அதை எடுப்பதற்கு சற்று சிரம பட வேண்டியிருக்கும். அந்த பூச்சி உள்ளே சென்று சும்மா இருக்காமல் மெல்லிய சவ்வு படலத்தை கடித்து வைக்கும்.
உள்ளே போகும்போது ஏதோ உயிர் பிழைக்க த ப்பிப்பதாக நினைத்து காற்றோட்டம் இல்லாத இருட்டு பகுதியான காது துவாரத்தில் பூச்சி சென்று விடும். அதன் பிறகு அதற்கும் தொல்லை. நமக்கும் பெருந்தொல்லை உண்டாகும்.

பூச்சி காது சவ்வை கடித்தால், வலி உயிர் போகும். அதை எடுக்கிறேன் பேர்வழி என சிலர் காதினுள் ஊக்கு, இடுக்கி அல்லது ஏதேனும் ஒரு கூர்மையான பொருளை கொண்டு குடையும்பொழுது,
காதினுள் உள்ள மெல்லிட சவ்வு படலம் சேதமாக வலி மிகும். வண்டு கடித்த வலி கூட , இதுவும் சேர்ந்துவிடும்.

இரவு நேரங்களில் மருத்துவரை அணுக முடியாத "அன் டைம்" என்று சொல்லக்கூடிய நேரத்தில் அப்படி புகுந்துவிட்டால், விடியும் வரை சிவ பூஜைதான். வலியால் நேரம் நீடிப்பதாக தோன்றும்.
எப்பொழுது விடியும் என்று மனது கிடந்து அல்லாடும். காதில் நுழைந்த பூச்சி என்ன வகை என்று தெரிந்தால் கூட அதை எடுத்திட முயற்சி செய்யலாம்.
சில பூச்சிகள் உள்ளே சென்று காதின் சவ்வை இறுக பற்றிக்கொள்ளும்.
அதை கொல்ல முயற்சிக்கும்பொழுது, அதை காதின் சவ்வை இறுகி பற்றிக்கொண்டவாறு உள்ளேயே இறந்துவிடும். என்ன செய்தாலும் அதை வெளியே எடுக்க முடியாது.

காதில் பூச்சி நுழைந்த பிறகு என்ன செய்வது?
மருத்துவரிடம் சென்று அதற்குரிய கருவியை வைத்து எடுப்பதன் மூலம் ஓரளவிற்கு வலியிலிருந்து தப்பிக்கலாம்.
காதில் எறும்பு புகுந்தால், புறு புறு வென ஒருவித சப்தம் உண்டாகும். காரணம் அது காதினுள் அங்கும் இங்கு ஊர்ந்து கொண்டிருக்கும். அந்த சப்தம் நமக்கு நன்றாக கேட்கும்.
அப்பொழுது நீரை எடுத்து, தலையை சாய்த்துக் கொண்டு காது துவாரத்தினுள் ஊற்றினால், அந்த எறும்பு எதிர்புறமாக மேல்நோக்கி வந்துவிடும்.
அப்பொழுது காது பகுதியை பூமியை நோக்கி திடீரென கவிழ்த்தால் அதில் மிதந்து கொண்டிருந்த எறும்பு நீருடன் கீழே விழுந்துவிடும்.
அல்லது காதின் வெளிப்புறத்திற்கு வந்து ஒட்டிக்கொண்டிருக்கும் அதை சுலபமாக எடுத்து விடலாம்.
காதில் பூச்சி விழுந்தால் அதை அப்படியே இலேசாக தட்டி விட்டால் வெளியே வந்து விழுந்து விடும்.
அதை எடுக்க உப்பு கலந்த நீரை அப்படியே ஊற்றினால், அந்த நீரின் உப்புத் தன்மை தாங்காமல் அது வெளியே வரும்.
ஒருவேளை அப்படி செய்து வராவிட்டால் காதை குடைந்து புண்ணாக்க வேண்டாம். அப்படி செய்தால் வலி, வேதனை அதிகரிக்கும்.
உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையை அணுகி, அங்கு மருத்துவரிடம் காட்டினால் அவர் உரிய சிகிச்சை அளிப்பார்.

காதில் வண்டு புகுந்தால் உடனடியாக செய்ய வேண்டியது:
மருத்துவரை சந்திப்பதற்கு வாய்ப்பு அப்பொழுது இல்லையெனில் உடனடியாக, காதினுள் தேங்காய் எண்ணை விட்டால், பூச்சிக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் அது தடுமாறி மேலே வரும்.
அல்லது உள்ளேயே இறந்து விடும். உடனே காதை கிழே சாய்க்க பூச்சி எண்ணையுடன் ஒட்டிக்கொண்டு வந்துவிடும்.

இதற்கு நல்லெண்ணையையும் பயன்படுத்தலாம்.
வெறும் தண்ணீரை ஊற்றுவதைவிட உப்பு கலந்த நீர்கரைசலை ஊற்றிடும்பொழுது, அதற்குத் தேவையான ஆக்சிஜன் பெற முடியாமல் அது வெளியே ஓடி விடும்.
குழந்தைகளுக்கு காதில் பூச்சி நுழைந்தால் என்ன செய்வது?
காது வலியால் குழந்தைகள் அழுது துடிக்கும். என்ன பிரச்னை என சில நேரங்களில் கவனிக்க முடியாது.
ஆனால் குழந்தை காதை தடவிக்கொண்டு அழும். அப்பொழுது காதில் ஏதோ பிரச்னை உள்ளது என்று அறியலாம்.
காதில் பேட்டரி போன்ற வெளிச்சத்தை பாய்ச்சும்பொழுது, அதனுள், பூச்சி, எறும்பு இருக்கிறதா என நாமே சோதிக்கலாம்.

சில நேரங்களில் சளி பிடித்தால் கூட காது வலியில் அழும். அதை சரியாக அனுமானித்து, நாமே சிகிச்சை அளிக்காமல், மருத்துவரிடம் சென்று காட்டி சிகிச்சை அளிக்க முடியும்.
பெரியவர்களுக்கு செய்யப்படும் உப்பு நீர் கரைசல், எண்ணைய் ஊற்றுதல் போன்றவற்றை சிறு குழந்தைகளுக்கு செய்யக்கூடாது. மருத்துவமனை சென்று சரியான சிகிச்சை அளிக்க வேண்டும்.
மருத்துவர் அதற்கென உள்ள சிறப்பு உபகரணங்களை பயன்படுத்தி மிக எளிதாக பூச்சி, வண்டு, எறும்பு, ஈ போன்ற எந்த ஒரு வஸ்து காதினுள் நுழைந்தாலும் எளிதாக எடுத்து விடுவார்.

காதில் ஏதேனும் காயம் ஏற்பட்டாலும், அதற்கென உள்ள வலி நிவாரணி மாத்திரைகள் கொடுத்து குணமடைய உதவுவார்.
எதையும் தெரியாமல் நாமே சிறு குழந்தைகளுக்கு செய்யும் வைத்தியம் சில நேரங்களில் ஆபத்தானதாக மாறிவிடும்.
எனவேதான் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விஷயத்தில் காதில் எறும்பு/வண்டு/ஈ/பூச்சிகள் புகுந்தால் மிக கவனமாக கையாண்டு, மருத்துவரின் உதவியுடன் சரி செய்ய வேண்டும் என்கின்றனர்.

0 Comments