பால்வினை நோய் எய்ட்ஸ் அறிகுறிகள் !

பால்வினை நோய்கள் என்றால் என்ன?


பால்வினை நோய் தொற்றியவருடன் உடல் உறவு கொள்ளும் போது பரவுவதுதான் பால்வினை நோய்கள் (எஸ்.டி.டி). பால்வினை நோய்களில் குனோரியா எனப்படும் வெட்டை நோய், சிபிலிஸ் எனும் மேக நோய், படை உள்ளிட்ட நோய்கள்தான் அவை. இவற்றை கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

இந்த நோய்களை கண்டறியாமல் விடும் போது எளிதில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகவேண்டிய நிலை ஏற்படலாம். பால்வினை நோய்கள் இனப்பெருக்க உறுப்புகளில் புண்கள் குறிப்பாக பெண்களுக்கு, ரத்தக்கசிவு உள்ள படை, தோல் கீறல்களால் எச்.ஐ.வி நுழைய கதவுகளை திறக்கின்றன.

எய்ட்ஸ் எப்படி பரவாது?

1. சாதாரணமாக சமூக பழக்கவழக்கங்களின் மூலம் பரவாது.
2.கைகுலுக்குதல், தொடுதல், கட்டியணைத்தல் மற்றும் முத்தம் மூலம் பரவாது.
3.பொதுக்கழிப்பறைகள் மற்றும் படுக்கை மற்றும் அவர்கள் பயன்படுத்திய உணவுப் பாத்திரங்கள் மூலம் பரவாது.
4.நீச்சல் குளம் மூலம் மற்றும் சலுõன் கடைகள் மூலம் பரவாது.
5.ஒவ்வொரு முறையும் துõய்மையாக்கப்பட்ட உபகரணங்கள் மூலம் ரத்த தானம்.
6.இருமல், தும்மல் மற்றும் கொசுக்கடி மூலம் பரவாது.

எய்ட்ஸ் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இதுவரை எய்ட்ஸை குணமாக்க எந்த மருந்தும் கண்டறியாத போது, நாம் கவனமுடன் நடந்து கொள்வதன் மூலம்தான் அதை தடுக்க முடியும். பொறுப்புடனும் பாதுகாப்புடனும் நடந்து கொண்டால் இந்த நோயை விரட்ட முடியும்.

எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர் அதுபற்றி தெரியாமலே அந்நோயை பரப்பிக் கொண்டிருப்பதால் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பள்ளிகளில் எய்ட்ஸ் பற்றி பேச எல்லோராலும் முடிவதில்லை. எய்ட்ஸ் பற்றி எல்லோருடனும் பேசுங்கள். உங்களுக்கு தெரிந்தவை பற்றி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்து பேசுங்கள்.

* எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்.
* உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
* நீங்கள் பெற்ற தகவல்களை மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

palvinai noigal


எச்.ஐ.வி யை விலை கொடுத்து வாங்கலாமா?

* பாதுகாப்பற்ற முறையில் ஒருவர் பலருடன் உடலுறவு கொள்தல்.
* பலருடன் உறவு கொள்பவருடன் பாதுகாப்பற்ற உடலுறவு.
* பயன்படுத்திய ஊசிகளை சுத்தப்படுத்தாமல் மீண்டும் பயன்படுத்துவது.
* பரிசோதனை செய்யாத ரத்தத்தை பெற்றுக் கொள்தல்.

பொறுப்பான உடலுறவு பழக்கங்கள்

1.திருமணத்துக்கு முன்பு உடலுறவு கொள்வதை தவிர்த்து விடுங்கள். அன்பையும் காதலையும் உணர்த்த உடலுறவு தான் ஒரே வழி அல்ல.

2.எச்.ஐ.வி தொற்று இல்லாத இருவர் உடலுறவு கொள்வதால் இருவரும் பாதுகாப்பு பெறுகின்றனர். எச்.ஐ.வி தொற்று அபாயமும் இல்லை.

3.தெரியாத புதியவருடன் உடலுறவு கொள்தல் அல்லது பாலுறவு தொழிலாளருடன் உடலுறவு கொள்ளும் ஒவ்வொரு முறையும் ஆணுறை அணிவது ஓரளவுக்கு எச்.ஐ.வி தொற்று மற்றும் பால்வினை நோய்கள் பரவாமல் பாதுகாக்கும்.

ஊசிகள்

4.ஒரு முறை பயன்படுத்தக்கூடிய ஊசிகளை பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய ஊசிகளை ஸ்டெர்லைஸ் செய்ய வேண்டும்.
5.மருத்துவரால் பரிந்துரைக்காதவற்றை ஊசியால் ஏற்றிக் கொள்ளாதீர்கள்.
6.நீங்கள் எவ்வளவு பாதுகாப்பானவராக தெரிந்தாலும் கூட, நீங்கள் போட்டுக் கொண்ட ஊசியை மற்றவருக்கு அனுமதிக்காதீர்கள்.

ரத்தம்

நோயாளிக்கு ஏற்றப்படும் ரத்தம் பரிசோதிக்கப்பட்டதுதானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments