பழைய சாதத்தை வீணாக்காமல்.. இரண்டே நிமிடத்தில் பஞ்சு போன்ற இட்லியை செய்யலாம்.. எப்படி தெரியுமா?

ஹெல்த் டிப்ஸ் நண்பர்களுக்கு இனிய வணக்கம். வீட்டில் மீந்து போன சாத த்தை வைத்து எப்படி சுவையான இட்லி தயாரிக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். பொதுவாக மீந்து போன பழைய உணவினை யாரும் சாப்பிடுவதில்லை. அதை வேஸ்ட் என நினைத்து குப்பையில் கொட்டி விடுகின்றனர். அந்தக் காலத்தில் பழைய சாதம் தான் விவசாயிகளின் காலை நேர உணவாக இருந்தது. இரவு மீந்துவிட்ட சாத்த த்தில் தண்ணீர் ஊற்றி வைத்து, பிறகு காலையில் எழுந்ததும் உப்பிட்டு, அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறு மண் பானையில் ஊற்றி, கரைத்து அதன் பின் அதிக நீருடன் அதை குடிப்பர். சில நேரங்களில் சின்ன வெங்காயத்தை தோலுரித்து கடித்து, அந்த அமிர்தமான பழைய சாத த்தை குடித்து விட்டு வயல்களுக்கு விவசாய வேலை செய்ய செல்வர்.



palaya satham idli

தற்பொழுது அப்படி பழைய சாத த்தை குடிக்கும் பழக்கம் பெரும்பாலோரிடமல் இல்லை. என்றாலும் மீந்துவிட்ட அந்த பழைய சாத த்தை வீணாக்கமல் அதை காலை நேர டிபன் ஆக பயன்படுத்திடலாம். ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியம். பழைய சாதம் வீணாகமலும் இருக்கும்.


பலரின் வீட்டில் சாதம் மீந்து போனால், அதை அடுத்த வேளைக்கு பயன்படுத்தாமல் வீணாக எடுத்து கொட்டுவது தான் வழக்கம். ஆனால் இனிமேல் அதை செய்யத் தேவை இல்லை.


வீட்டில் மீதமான சாதத்தை வைத்து இரண்டே நிமிடத்தில் பஞ்சு போல, எப்படி இட்லி மாவு தயாரிக்கலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்..


இட்லி செய்வதற்கு தேவையான பொருட்கள்: சாதம் ஒரு- 1 கப் ரவை-1/4 கப் தயிர்-1/4 கப் உப்பு-தேவையான அளவு


இவை அனைத்தையும் மிக்ஸியில் ஒன்றாக போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் நிறைய ஊற்றி விடக்கூடாது. கெட்டியான இட்லி மாவு பதத்தில் அரைத்து கொள்ளுங்கள்.


அரைத்த அந்த மாவை பத்து நிமிடங்கள் வரை அப்படியே வைத்துவிட்டு, அதன் பின்பு எப்பவும் போல், இட்லி சட்டியில், இட்லி ஊற்றி விடலாம். மாவு அரைத்து செய்த இட்லியை விட, இந்த இட்லி மிகவும் சுவையானதாக இருக்கும்.

Post a Comment

0 Comments