நடிகர் வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடித்த திரைப்படம் மாமன்னன். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் வடிவேலு தன்னுடைய திரை பயணத்தில் ஒரு மிகப்பெரிய சாதனையை
எட்டியுள்ளார். இதுவரைக்கும் காமெடி நடிகராகவே அறியப்பட்ட வடிவேலு, தற்பொழுது பாத்திரப்படைப்பு ஒன்றில் நடித்து தான் நடிப்பிலும் எப்பொழுதும் ஜாம்பவான் தான் என்பதை நிரூபித்திருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலினை விட ஒரு படி மேலே போய் அவருக்கு முக்கியம் துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் வரும் வசனங்கள் மற்றும் காட்சி அமைப்புகள் அனைத்தும் தத்ரூபமாக அனைத்தும் மக்களுக்கும் அந்த கருத்துக்கள் கொண்டு போய் சேர்க்கும் விதமாக இருந்தது.
திரைப்படத்தைப் பற்றிய பல்வேறு இருவிதமான கருத்துக்கள் நிலவே வந்த போதிலும் திரைப்படத்தில் எடுத்துக் கொண்ட அந்த கருத்துக்கள் முழுவதும் மக்களிடையே கொண்டு சேர்ப்பது நோக்கமாக கொண்டு திருமாரி செல்வராஜ் அவர்கள் திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பது கண்கூடாக தெரிகிறது.
இந்த திரைப்படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் மற்றும் வடிவேலு உதயநிதி ஸ்டாலின் போன்ற முக்கியமான நடிகர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் பற்றி இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை.
என்றாலும் நடிகர் வைகைப்புயல் வடிவேலு அவர்களுக்கு ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் திரைப்படத்திற்காக சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் உலாவி வருகிறது.
உறுதிப்படுத்தப்படாத இந்த தகவலை சினிமா வட்டாரங்கள் தெரிவித்து இருந்ததாக சமூக இணையதளங்கள் பரப்பி வந்தாலும் உண்மையாகவே திரு வடிவேல் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் என்ன என்பது இதுவரைக்கும் வெளியாகவில்லை என்பதே உண்மை.
0 Comments