முகம் பொலிவு பெற கேரட், பீன்ஸ்

முகம் பொலிவு பெற கேரட், பீன்ஸ், செலரி போன்றவற்றைப் தினமும் உணவில் சேர்த்து வர வேண்டும். இதனால் முதுமை எட்டிப் பார்க்காது. முகம் அழகாக காட்சி அளிக்கும். எப்பொழுதும் புத்துணர்வுடன் இருக்கும்.

mugam polivu pera
முகம் பொலிவு பெற டிப்ஸ்

அழகு என்பது மனசை பொறுத்ததுதான் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். மனம் நன்றாக இருந்தால் புன்னகை முகத் தோடு அனைவரையும் வசீகரிக்கும் முகமாக அழகாக மாறி விடும்.

அழகுக்கு எதிராக இருப்பது மன அழுத்தம் மட்டுமே. எனவே மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்தை தவிர்த்தால் தானாகவே முகம் வசீகரிகமாகும்.

இவை அனைத்தையும் விட முக்கியமானது தினசரி சராசரியாக 7 மணி நேரம் தூங்குவது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும் முகம் அழகாகும்.

போதுமான ஓய்வு, மன அழுத்தம் இல்லாமை, போஷாக்கான உணவுகள், சரியான தூக்கம் இவைகள் இருந்தால் இயற்கையாகவே "முகம் பொலிவு" பெற்றுவிடும்.

முகம் பொலிவு பெற இதையும் செய்து பார்க்கலாம்.


  • ஆரஞ்சு பல தோலை காய வைத்து ஒரு கப் எடுத்துக்கொள்ளவும்.
  • அதனுடன் சம அளவு காய்ந்த ரோஜா இதழ்களை சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக பொடியாக்கவும். 
  • மேலும் அதோடு கடலைமாவு -2கப் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • தினமும், இந்த கலவையிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து, அதோடு சிறிதளவு பால் ஆடை சேர்த்து நன்கு குழைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி, காய்ந்ததும் பச்சை தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி விடவும். 
  • இவ்வாறு செய்வதால் முகப் பளபளப்பு அடையும். 
  • பாலை காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி , அந்த வியர்வை துடைக்காமல் காயவிட்டு , அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும். 
  • தக்காளியை மிக்சியில் போட்டு அதனை ஜூஸாக்கி அதை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கடலைமாவு போட்டு கழுவினால் முக பளபளப்பு அடைந்து பொலிவு பெறும். 
  • சிறிதளவு வெண்ணை எடுத்து நன்கு குழைத்து முகத்தில், முழங்கை, கழுத்து போன்றவற்றில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கடலை மாவு போட்டு கழுவினால் மேனி மிருதுவாகும். கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறையும். 
  • நன்கு கனிந்து தூக்கி எறியும் நிலையில் உள்ள வாழை பழத்தை கூழாக்கி அதை முகத்தில் தேய்த்து ,அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முக பளபளப்பு கூடும். 
  • பெண்கள் கஸ்தூரிமஞ்சள், பூலாங்கிழங்கு, ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும். 
  • தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும். 
  • பாதாம் பருப்பை அரைத்து தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர முகம் பளப்பளப்பாகும். 
  • உருளைக்கிழங்கு சாறுடன் கடலைமாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் "முகம் பொலிவு" பெறும். 
  • கஸ்தூரி மஞ்சள் தூளை பன்னீரில் கலந்து வெயிலில் வைத்து சூடாக்கி, அதை முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள் மற்றும் அவை வந்த அடையாளங்கள் மாயமாகிவிடும்.


மேற்கண்டவைகளை செய்து வந்தால் இயற்கையிலேயே உங்களுடைய முகம் பொலிவு பெற்று ஜொலிக்கும்.

Tags: Face beauty tips, Mugam Alagaga, Face Polivu Pera

Post a Comment

0 Comments