இரைப்பையில் ஏற்படும் புண்ணை உடனடியாக குணப்படுத்தி ரத்தக் கசிவை நிறுத்தக் கூடிய மருந்தைக் கண்டுபிடித்த டாக்டர் வி.ஜி.மோகன் பிரசாத்துக்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம் அங்கீகாரம் அளித்துள்ளது.
வி.ஜி.எம். மருத்துவமனையின் தலைவரும், இரைப்பை குடல் மருத்துவ சிகிச்சை நிபுணருமான டாக்டர் வி.ஜி.மோகன்பிரசாத் கடந்த 2011-ஆம் ஆண்டு இரைப்பை புண்ணால் பாதிக்கப்பட்ட மென்பொருள் நிபுணருக்கு பல்வேறு சிகிச்சைகளை அளித்தார். ஆனால், அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் புண் உருவாகி உள்ள பகுதியில் முட்டை ஜவ்வு மூலம் திசு வளர்ச்சியை உடனடியாக ஏற்படுத்தி குணப்படுத்தும் மருந்தைத் தயாரிக்கும் ஆராய்ச்சியில் டாக்டர் மோகன்பிரசாத் ஈடுபட்டார்.
இதையடுத்து, முட்டை ஜவ்வு மூலம் தயாரிக்கப்பட்ட மருந்தை (ஹீமோஹீல்ஸ்ப்ரே) கொண்டு இரைப்பையில் ஏற்பட்ட புண் மீது எண்டாஸ்கோப்பி மூலம் சிகிச்சை அளித்தார். சிகிச்சைக்குப் பின் 48 மணி நேரத்தில் புண் முற்றிலுமாக குணமடைந்தது.
மேலும், 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேசக் கருத்தரங்கில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்தைக் கொண்டு சிகிச்சை அளிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.
இந்தப் புதிய மருந்து கண்டுபிடிப்புக்காக இங்கிலாந்து நாட்டில் உள்ள எடின்பரோ ராயல் பல்கலைக்கழகம் அங்கீகாரம் அளித்துள்ளது.
கடந்த நவம்பர் 13-ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் மோகன் பிரசாத்துக்கு எப்.ஆர்.சி.பி. என்ற கௌரவ பட்டத்தையும் அந்தப் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.

0 Comments