மார்புச் சளி நீங்க கல்யாண முருங்கை

மார்புச் சளியால் அவதிப்படும்போது மூச்சுத்திணறல்-லேசாய் காய்ச்சல், குளிர் இருமல் போன்றவையும் கூட்டணி அமைத்து வாட்டும். இதற்குச் சிறந்த நிவாரணி கல்யாண முருங்கை. இது மரவகையைச் சார்ந்தது. சிவப்பு நிற பூக்களும், முருங்கைக்காய் போன்ற காய்களும் கொண்ட கிளைகளில் முள் உண்டு. எனவே முள் முருங்கை என்ற பெயரும் உண்டு.

இதன் இலையை நசுக்கி இரண்டு சங்கு சாறு எடுத்து அத்துடன் சிறிது தேன் கலந்து குழந்தைகளுக்குப் புகட்ட சளி எளிதில் வெளியேறும். இந்தச் சாற்றில் பழுக்கக் காயவைத்த இரும்புக்கரண்டியை முக்கிக் கொடுத்தால் கூடுதல் நிவாரணம். அப்போது சற்று இரும்புச்சத்து சேர்கிறது. எனவேதான் இந்த ஏற்பாடு. திருஷ்டி - பயந்த குணம் போகும் என்று மறைமுகமாகக் கூறுவார்கள் பெரியவர்கள்.

ஊறவைத்தப் புழுங்கல் அரிசி ஒரு கைப்பிடி இந்த இலை கைப்பிடி அளவு இவை இரண்டையும் மசிய அரைத்து உப்பு - மிளகு - சீரகம் தட்டிப் போட்டு அடை சுட்டு சாப்பிட பெரியவர்களுக்கு சளி எளிதில் வெளியேறும். நன்கு பசி எடுக்கும்.

Post a Comment

0 Comments