வாழைப்பழம் மிக்ஸ்டு சாக்லேட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

                             

   
banana mixed chocklate icecream
                                   வாழைப்பழம் மிக்ஸ்டு சாக்லேட் ஐஸ்கிரீம்



தேவையான பொருட்கள்:

            பெரிய வாழைப்பழம் - 1


            கருப்பு பேரீச்சை பழம் - 12

           கோகோ பவுடர் - 2 ஸ்பூன்

 
           உப்பு - ஒரு சிட்டிகை


           ஏலக்காய் - ஒரு சிட்டிகை


செய்முறை :

கருப்பு பேரீச்சை பழத்தை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய பின்பு கொட்டை நீக்கி சதையை தனியாக எடுத்துக் கொள்ளவும்.

வாழைப் பழத்தை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.

மிக்ஸியில் நறுக்கிய வாழைப் பழத்தை சேர்த்து அரைக்கவும்.

மிக்ஸியில் வாழைப் பழத்துடன் பேரீச்சை சேர்த்து அரைக்கவும்.

அடுத்ததாக கோகோ பவுடர், உப்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து மைய அரைக்கவும்.

அரைத்ததும் அதை ஒரு கண்ணாடி டப்பாவில் ஊற்றி ஃபிரீசரில் வைக்கவும்.

ஐஸ்கிரீம் பதத்திற்கு உறைந்ததும், தேவைப்பட்டால் பிஸ்தா, பாதாமை உடைத்து அதன் மேல் தூவலாம்.

சுவையான பனானா சாக்லெட் ஐஸ்கிரீம் தயார்.

இதில் சேர்க்கப்பட்ட வாழைப்பழம் மற்றும் கருப்பு பேரீச்சை உடலுக்கு பல ஊட்டச்சத்துகளை கொடுக்கக் கூடியவை என்பதால் பயமில்லாமல் சாப்பிடலாம்.

Post a Comment

0 Comments