ரோட்டா வைரஸ் என்பது என்ன?
ரோட்டா வைரஸ் என்பது கடுமையான வயிற்றுப்போக்கினை ஏற்படுத்தும் கிருமியாகும். ஐந்து வயதிற்கு குறைவான குழந்தைகளை அதிகம் பாதித்து நீரிழப்பினை ஏற்படுத்தி உயிரைப்பறிக்கும் ஒரு கொடூரமான வைரஸ் ஆகும்உலகம் முழுவதும் வருட்த்திற்கு ஆறு லட்சம் குழந்தைகளை இது கொல்கிறது
ரோட்டா வைரஸ் – சக்கரம் போன்ற வடிவில் இருக்கும் (அதனாலேயே ROTA VIRUS என்ற பெயர்)
ரோட்டா வைரஸ் வெகு சுலபமாக பரவக்கூடியது.இது முக்கியமாக கைகள்,பொம்மைகள், பொருட்கள்,தரை பரப்புகள் மற்றும் ஒரு நபர் இன்னொரு நபரை தொடுவதன் மூலமாக தொற்றிக்கொள்ளக்கூடியதாகும்.
மேலும் இவைகள் தும்மல்,இருமல் காற்று மூலமாகவும் பரவுகிறது.
0 Comments