அட கழுத.. என்று முதல் மரியாதை படத்தில் சிவாஜி கணேசன் ராதாவை பார்த்து சொல்லும் ஒரு சீன் வரும். அந்த இடத்தில் கழுதையை கூட அவ்வளவு அழகாக கூறியிருப்பார். உலக பேர ரசி கிளியோ பாட்ராவே கழுதை பாலில் தான் குளிப்பாராம். அந்தளவுக்கு அதில் மகிமை பொருந்தியுள்ளது. அப்படிப்பட்ட இந்த கழுதைப் பாலில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளன. அவை எவையெவற்றிற்கு எல்லாம் பயன் தருகிறது என்று பார்ப்போமா?
கழுதை பால் மருத்துவ குணங்கள்
சித்தர் பாடல்கள் 1
கழுதைபால் வாதங் கரப்பான் விரணந்
தழுதளையுள் வித்திரதி தானே யெழுகின்ற
ஒட்டியபுண் சீழ்மேக மோடு சொறிசிரங்கு
கட்டியவை போக்குங் கழறு
சித்தர் பாடல்கள் 2
கர்த்தவர்த்தின் பாற்குக் கரிய கிரந்தியறுஞ்
சித்தப் பிரமைபித்தந் தீருங்காண் தத்திவரும்
ஐய மொழியு மதிக மதுரமுமாஞ்
செய்ய மடமயிலே செப்பு
மருத்துவ பயன்கள்
- வாதநோய்
- கரப்பான்
- புண் தழுதளை ரோகம்
- உள்வித்திரிக் கட்டி
- ஒட்டுக்கிரந்தி
- சீழ்ப்பிரமேகம்
- சொறி
- சிரங்கு
- அற்புத விரணம்
- கருங்கிரந்தி
- சித்தப்பிரமை
- பித்த தோஷம்
- கபநோய் இவைகள் போக்கும்.
கழுதை பால் குடிக்கும் முறை
கழுதை பாலை தனியாகவும் குடிக்கலாம் அல்லது நோய் குணமாக்கும் சித்த மருந்துகளுக்கு அனுபானமாகவும் கொடுக்க மேற்கூறிய நோய்கள் யாவும் குணமாகும்.
கழுதை பால் குழந்தைகளுக்கு
கழுதை பாலில் புரதசத்து அதிகம் நிரைந்துள்ளது குழந்தைகளுக்கு ஜீரண சக்தி குறைவாக இருப்பதால் ஜீரணம் ஆவது சற்று கடினமாக இருக்கும். ஆகவே 15 முதல் 20 மில்லி வரை கொடுக்கலாம்.
பெரியோர்கள் கருத்து.
கழுதை பால் குறித்து வயதில் மூத்த பெரியோர்களிடமும், மருத்துவர்களிடமும் வினாவியதில், கழுதை பால் குழந்தைகளுக்கு ஒரு சங்கடை அளவு ஒரு முறை மட்டும் கொடுப்பது வழக்கத்தில் இருந்தது, ஒரு சொட்டுகள் கழுதை மூக்கின் ரத்தம் சேர்த்து கொடுக்கபட்டது இதனால் இருதயம் சர்ந்த நோய்கள் வராது என்றும் அத்துடன் இருதய ஓட்டை விரைவில் அடைபடும், செவாப்பு என்ற இருதய பிரச்சயனையால் உடல் நீல நிறமாக மாறும் நோய் தாக்கம் ஏற்படாது, இந்த வைத்திய முறை அந்த காலகட்டங்களில் இயல்பான நடைமுறையில் இருந்து வந்தது என்றும் கூறுகின்றனர்.பச்சிலம் குழந்தைகள்
கழுதை பாலில் அதிகப் படியான புரதச் சத்து உள்ளதால், பச்சிலம் குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பினால் அனுபவமிக்க சித்த மருத்துவர் அல்லது வயதில் மூத்த பெரியோர்களிடம் கேட்டு அவர்களின் அறிவுரையின் படி கொடுக்கவும்.
குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய அளவு
மூன்று வயதை தாண்டிய குழந்தைகளுக்கு சித்த மருத்துவர் ஆலோசனை கேட்டு வாரம் சுமார் 20 மில்லி முதல் 30 மில்லி வரை கொடுக்கலாம் முன்று முறை கொடுக்க போதுமானது. 15 வயக்கு மேற்பட்டவர்கள் மேற்கூறிய நோய்கள் இருப்பின் நோய் குணமாகும் வரை வாரம் ஒரு முறை 50 மில்லி வீதம் குடிக்கலாம்.கழுதை பால் குளியல்
அக்கால கட்டங்களில் செல்வந்தர்கள் தங்களின் குழந்தைகளை கழுதை பாலில் குளிப்பட்டி வந்ததாகவும். பருவ பெண்கள், முக அழகுக்காக முகத்தில் பூசி வந்ததாகவும் வயதில் மூத்தவர்கள் கூறுகின்றனர்.சித்தர்கள்
சித்தர்கள் ஒரு பொருளை மருந்தாக்கி மற்றவர்களுக்கு கொடுக்கும் முன் அதை தான் உடலாலும், மனதாலும், ஞானத்தாலும், தெய்வீக சக்தியாலும் முழுமையாக உணர்ந்த பின், பாதிப்பு இல்லாமல் இருப்பின் மற்றவர்களுக்கு கொடுதனர். ஆகையால் இதனை மூட நம்பிக்கை என்று எண்ணாதீர்கள்.கழுதை பாலில் உள்ள சத்துக்கள்
இன்றைய இன்றைய நவீன அறிவியல் உதவியால் கழுதை பாலில் உள்ள கீழ் குறிப்பிட்ட சத்துக்களை கண்டறிந்துள்ளனர்.
- வைட்டமின் "எ"
- வைட்டமின் "பி1"
- வைட்டமின் "பி2"
- வைட்டமின் "சி"
- வைட்டமின் "இ"
- இமினோ குளோபின்
- மாங்கனீசு
- சுண்ணாம்பு சத்து
- பொட்டாசியம்
- பாஸ்பரஸ்
- ஜின்ங்க்
- சோடியம்
சரும நோய் கிரீம், கழுதை பால் பவுடர்
வெளிநாட்டு தயாரிப்பில் கழுதை பாலினால் தயாரிக்க பட்ட வரண்ட சமருத்துக்கான கீரீம்கள், முக அழகு கிரீம்கள், கழுதை பால் சோப்பு, கழுதை பால் பாவுடர்கள் தற்பொது விற்பனைக்கு வந்துள்ளன. கழுதை பால் கிடைக்காதைவர்கள் பால் பவுடர் நம்பகத்தன்மை ஆராய்ந்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.
0 Comments