இதய ஆரோக்கியம் சீராக இருக்க நீண்ட நேர உறக்கம் அவசியம்!!!

sleeping


ஏழு மணிநேரத்திற்கும் குறைவாக தூக்கம் இருக்கும்பட்சத்தில் இரத்த அழுத்தம் தொடங்கி மற்ற உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.  

நம் உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்க நீண்ட நேர ஆழ்ந்த உறக்கம் மிகவும் முக்கியம்.  தூக்கம் சீராக இல்லையென்றாலே உடலில் எல்லா பிரச்சனைகளும் வந்துவிடும். 

 தூக்கத்தின் தரத்தை பொருத்தே மனநிலையும் சீராக இருக்கும்.   ஏழு மணிநேரத்திற்கும் குறைவாக தூக்கம் இருக்கும்பட்சத்தில் இரத்த அழுத்தம் தொடங்கி மற்ற உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.  

44 முதல் 62 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான ஆண்கள் மற்றும் பெண்களிடம் இரத்த மாதிரி எடுக்கப்பட்டது.  அவர்கள் தூக்கத்தின் தரம் மற்றும் நேரம் குறித்தும் சோதனை செய்யப்பட்டது.  அந்த எண்ணிக்கையில், பாதி பேர் 7 முதல் 8.5 மணி நேரம் தூங்கினார்கள். 

 மீதமுள்ளவர்கள் 5 முதல் 6.8 மணி நேரம் தூங்கினார்கள்.  இவர்களிடம் இந்த பரிசோதனைக்கு முன்பே வீக்கம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இருதய ஆரோக்கிய பரிசோதனை செய்து கொண்டனர். 

 அதில் குறைவான நேரம் தூங்கியவர்களுக்கு 40 முதல் 60 சதவிகிதம் இருதய ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.  இருதய ஆரோக்கியம் சீராக இருக்க தினசரி 7 மணி நேர தூக்கம் அவசியமாக இருக்கிறது.

  மூளை செயல்பாடு, உறுப்புகளின் ஆரோக்கியம் போன்றவற்றிற்கு தூக்கம் நிச்சயமாக தேவை.  

Post a Comment

0 Comments