கொ ரோ னோ நோய்க்கு மற்றுமொரு மருந்து கண்டுபிடிப்பு ! இது குணமாக்கும் என டாக்டர்கள் நம்பிக்கை !

கொ ரோனா தொற்றால் பாதிகப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை முறை இன்னும் கண்டுபிடிக்க பட வில்லை என்பது கசப்பான உண்மை. ஆனால் சளி மற்றும் நிமோனியாவிற்கு கொடுக்கப்படும் மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்தி தற்போதைக்கு மருத்துவம் பார்த்து வருகின்றனர். மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு "வெண்டிலேட்டர்" வைத்து, செயற்கை சுவாசம் அளித்து வருகின்றனர்.

எதிர்ப்பு சக்தி மற்றும் உடலின் திறன் பொருத்து அந்த வை ர சை எதிர்த்து நோயாளிகள் போராடி வென்று வருகின்றனர். வயோதிகம் மற்றும் வேறு வித நோய்களுடன் போராடி வருபவர்கள் பிழைப்பது கடினாக உள்ளது. இந்நிலையில் இந்த கொடிய கொள்ளை நோய்க்கு எதிர்ப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பல சிக்கல் எழுந்துள்ளது.

கொரோன மருந்து கண்டுபிடிப்பதில் சிக்கல்


பல்வேறு வல்லரசு நாடுகளும் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. மேலும் இதற்கென சித்த மருத்துவத்தில் "கப சுர குடி நீர்" "வாத சுர குடி நீர்" போன்ற மருத்து கலவைகள் இந்நோயை 100% குணப்படுத்துகின்றன என சித்த மருத்துவர் டாக்டர் தணிகாசலம் வீடியோ மூலம் பதிவுகளை போட்டு வருகின்றார். இவரது வலியுறுத்தலை தொடர்ந்து சித்த மருத்துவம் சார்பாக, தமிழக அரசு கப சுர நீரை பொது மக்கள் அரசு மருத்துவமனைகளில் வழங்கி வருகிறது.

பொதுசேவை செய்யும் இளைஞர்கள் தங்களது பகுதி மக்களுக்கு இந்த எதிர்ப்பு சக்தி கொடுக்கும் குடிநீரை காய்ச்சி வடிகட்டி கொடுத்து வருகின்றனர். சித்த மருத்துவத்தில் 5 நாட்களில் இந்நோய் பூரண குணமடைவதாக சித்த மருத்துவர்கள் நம்புகின்றனர் ஆனால் இதுவரைக்கும் ஒரு அதிகார பூர்வமான தகவல்கள் ஏதும் இல்லை.

corono treatment

வேறு மருந்துகள் கொருனோ விற்கு பயன்படுத்தலாமா?


உலகமே பயந்து நடுங்கி கொண்டிருக்கும் இந்த கொடிய  Coரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இன்னும் 10 வருடங்கள் பிடிக்கும் என வைராலஜி நிபுணர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையில் இது தொடர்பான வேறு நோயகளுக்கான மருந்துகள் ஓரளவிற்கு இதை குணப்படுத்தும் சக்தி கொண்டவை என மருத்துவர்கள் நம்புகின்றனர்.

இதுவரைக்கும் குணமானவர்களுக்கு அதுபோன்ற மருந்துகள் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. கூடவே நல்ல எதிர்ப்பு சக்தி கொடுக்க கூடிய போஷாக்கான உணவுகளும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நியூ யார்க் நகரில் நெஞ்சுவலிக்கு கொடுக்கப்படும் மாத்திரை கொரோனா சிகிச்சைக்கு பரிசோதனை முறையில் கொடுக்கப்படுகிறது.


பெட்சிட் மருந்து கலவையில் சேர்க்கப்படும் ஃபேமோட்டிடைன் என்ற மருத்துவ ரசாயனம் கொரோனா சிகிச்சைக்காக விரைவில் தயாராகுமென பெயின்ஸ்டைன் இஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சவுன்ஸ் மருத்துவர் கெவின் டிரேசி தெரிவித்துள்ளார்.இந்த இன்ஸ்டிடியூட் நியூ யார்க் நகரில் 23 மருத்துவமனைகளை நிறுவி உள்ளது.

இதுவரை 187 நோயாளிகள் இந்த மருத்துவனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.மருத்துவ வரலாற்றில் ஒரு நோய்க்காகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து வேறு ஒரு நோய்க்குப் பயன்படும் சம்பவங்கள் அதிகளவில் நிகழ்ந்துள்ளன.

இதேபோல இந்த மருந்து கொரோனாவை போக்க வல்லது என சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளதால் இதனை நோயாளிகளுக்குக் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது வெற்றி பெற்றால் அடுத்தடுத்து கொரோனா நோயாளிகளை குணப்படுத்த முடியும் எனப்படுகிறது.

Post a Comment

0 Comments