கமலின் புதிய படத்தில் ஜோடியாக நடிக்கும் அந்த அதிர்ஷ்கார நடிகை யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே !


நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு கமல் நடிக்கும் புதிய படத்தில் நடிகை ஒருவர் ஒப்பந்தமாகவுள்ளார். அது குறித்து அந்த நடிகையிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. சினிமா உலகில் பழம் தின்று கொட்டை போட்டவர் என்று கமலை குறிப்பிடலாம். அவர் தொடாத உச்சமே இல்லை. நடிப்பு, டைரக்சன், பாட்டு, இசை, போட்டோ கிராபி, டான்ஸ் என அனைத்தையும் கரைத்து குடித்தவர். அது மட்டுமல்லாது ஒரு தமிழ் புலவர் அளவிற்கு தமிழையும் வெளுத்து வாங்குபவர்.கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்து 2006-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய வேட்டையாடு விளையாடு படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன.

இதனை கவுதம் மேனன் உறுதிப்படுத்தி உள்ளார். கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தை கைவசம் வைத்துள்ளார். இதன் படப்பிடிப்பை விபத்து மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைத்துள்ளனர். ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.இந்த படத்தை முடித்த பிறகு தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். அதோடு வேட்டையாடு விளையாடு 2-ம் பாகத்துக்கான வேலைகளும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே அனுஷ்கா பெயர் அடிபட்டது.

கீர்த்தி சுரேஷ் - கமல்தற்போது கீர்த்தி சுரேஷ் பரிசீலனையில் இருப்பதாகவும், பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஊரடங்கு முடிந்ததும் வேட்டையாடு விளையாடு 2-ம் பாகத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் விவரம் வெளியாகும் என்று தெரிகிறது. கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். தெலுங்கிலும் 2 படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

இவர்தான் கமலுடன் நடிக்க விருக்கும் அதிர்ஷ்டகார நடிகை என்று சொல்லவும் வேண்டுமா என்ன?


Post a Comment

0 Comments