இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற குறைந்த கொலஸ்டிரால் கொண்ட காய்கறிகள்...
இதய பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் நாம் அனைவரும் குறைந்த அளவு கொலஸ்டிரால் கொண்ட உணவுகளை உட்கொள்வதால் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
அந்த வகையில் குறைந்த அளவு கொலஸ்டிரால் கொண்ட முக்கிய காய்கறிகளை பற்றி காண்போம்.
கீரைகள்:
கீரைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இது கெட்ட கொழுப்பை கரைக்கும்.
ப்ரோக்கோலி:
ப்ரோக்கோலியில் எளிதில் கரைந்து உடலுக்கு தேவையான ஆற்றலை தரக்கூடிய நார்ச்சத்து உள்ளது.இது இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
கத்தரிக்காய்:
கத்தரிக்காயில் கலோரிகள் குறைவாகும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.
கேரட்:
கேரட்டில் பீட்டா பரோட்டிங் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது இது இருதய நன்மைகளை அள்ளித் தருவதில் முக்கிய பங்காற்றுகிறது.
பூண்டு:
கொலஸ்ட்ரால் அளவுகளில் சாத்தியமான விளைவுகள் உட்பட இருதயநலன்கள் உடன் பூண்டு தொடர்புடையது .ஆகவே நமது உணவில் பூண்டை அதிகம் சேர்த்துக் கொள்வது இதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து நம்மை காக்கும்.
0 Comments