வெள்ளை தேமல் (தேம்பல்) குணமாக சூரணம், பற்ப்பம்
தேவையான பொருட்கள்
- சிவனார் வேம்பு 125 கிராம்
- கரும் துளசி வேர் 125 கிராம்
- பரங்கி சக்கை 125 கிராம்
- கார்போக அரிசி 75 கிராம்
- வெட் பாளை அரிசி 75 கிராம்
- குட சப்பாளை100 கிராம்
- குப்பை மேனி 70 கிராம்
- சங்கங்குப் பி 100 கிராம்
- பிரம்மன் தண்டு 50 கிராம்
- கீழாநெல்லி 100 கிராம்
- சீமை அகத்தி பூ 25 கிராம்
- சரக்கொன்றை பூ 25 கிராம்
- ஆவாரம் பூ 100 கிராம்
- சென் பக பூ 100 கிராம்
- செம்பருத்தி பூ 100 கிராம்
வெண் தேமல் மறைய சூரணம் செய்முறை
மேற்குறிப்பிட்ட எல்லா பொருட்களை சூரணம் செய்து அரை ஸ்பூன் அளவு தேன் அல்லது வெண்ணீரில் கலந்து சாப்பிடவும் அத்துடன்
வெண் தேமல் பற்பங்கள்
- அயபற்பம் 50 மில்லி கிராம்
- தாமிரபற்பம் 25 மில்லி கிராம்
- கந்தக பற்பம் 25 கிராம்
இவற்றை ஒன்று கலந்து ஒர் அரிசி எடை அளவில் எடுத்து அரை ஸ்பூன் திரிகடுகு சூரணத்தில் தேன் அல்லது பசு வெண்ணையில் கலந்து காலை மாலை உணவிற்க்கு பின் சாப்பிடவும்
மருந்து உண்ண பத்தியம்
கடும் பத்தியமாக மது, மாமிஷம், கத்திரிக்காய், கடலை பருப்பு, புளி நீக்கி உணவு உண்ண வேண்டும்.
தீரும் நோய்கள்
குஷ்டம் நோய்கள் வென் தேமல் வென் படை சிரங்கு அரிப்பு நமச்சல் தோல்வியாதிகள் அனைத்தும் தீரும்.
முக்கிய குறிப்பு.
மேற்கண்ட பற்ப்பவகைகள் நாட்டு மருந்து கடைகள் அல்லது மருத்துவர்களிடம் கிடைக்கும். தரமான பற்ப்பங்கள் மட்டுமே பயன் தரும். மருந்துகளில் முன் அனுவம் இல்லாதவர்கள் அனுபாம் உள்ளவரிடம் கேட்டு பயன்படுத்துங்கள்
0 Comments